திருவாரூரில் முஸ்லிம்கிளிடையே நடந்த மோதல்-2 பேர் சுட்டுக் கொலை

06/09/2010 14:21

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் திருவாரூர் மாவட்டம் தி்ருவிடைச்சேரியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
 

சம்பவத்தன்று குத்புதீன் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகை நடத்தும் வீட்டிற்கு அவரது நண்பருடன் தொழுவதற்க்காக வந்திருந்தார், ஏற்கனவே அந்த இடத்தில் தொழுகை நடத்துவதற்க்கு எதிர்ப்பு தெறிவித்துவந்த இதயத்துல்லா தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாத குத்புதீன் அங்கு தொழுகைக்காக வந்ததில் ஆத்திரம் அடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் சுற்றியுள்ளவர்களை அழைத்து அவருடன் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளால் இதில் பெரும் காயம் அடைந்த குத்புதீன் இது சம்மந்தமாக அவரது உறவினர் ஹாஜி முகமதுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

குத்புதீனின் உறவினர் ஹாஜி முகமது (40). இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சிமலையில் வசித்து வருகிறார்.

தன்னிடம் இதயதுல்லா மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்வது தொடர்பாக ஹாஜி முகமதுவிடம் குத்புதீன் கூறினார். இதனால் ஹாஜி முகமது மற்றும் அவரது தரப்பினர் 15 பேர் நேற்று இரவு 3 கார்களில் திருவிடைச்சேரி சென்றனர்.

குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (55).

பள்ளிவாசலில் இருந்த இமாம் முகமது இஸ்மாயிலிடம் ஹாஜி முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இமாமின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். சற்று நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கை கலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஹாஜி முகம்மது தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடவே, குண்டு பாய்ந்து இமாம் இஸ்மாயில் மற்றும் அஜீத் முகமமது என்ற 60 வயது முதியவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவத்தின்போது அங்கிருந்த காஜா மைதீன் (41), பால்ராஜ் (55), ராமதாஸ் (45), சந்தியாகு (26) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டால் பெரும் பதட்டமாகி அங்கு நின்றிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீஸார் திரண்டு வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகம்மதுவின் தம்பி ரபீக் பிடிபட்டார்:

துப்பாக்கியால் சுட்டு இரண்டு பேரைக் கொன்று விட்டுத் தலைமறைவான முகம்மதுவை தேடி போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர்.ஆனால் அவர் வீட்டில் இல்லை. வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்த லைசென்ஸ் இல்லாத 2 கைத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் முகம்மதுவின் தம்பி ரபீக்கைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த திருவிடைச்சேரியில் பெரும் பதட்டம் நிலவுவதால் மத்திய மண்டல ஐஜி கரன் சின்ஹா அங்கு முகாமிட்டுள்ளார்.இது போக தஞ்சை, நாகை, திருவாரூர் எஸ்.பிக்களும் முகாமிட்டுள்ளனர்.