நமதூரில் நடைபெற்ற சற்று வித்தியாசமான திருமணம்

10/12/2010 14:36

கடந்த வாரம் நமதூரில் ஒரு திருமணம் நடைபெற்றது, வழக்கம் போல் வரதட்சனை மற்றும் ஆடம்பரங்களுக்குப் பஞ்சம் இல்லாவிட்டாலும் மழை காரணமாக ஊர்வலங்கள் நடத்தப்பட வில்லை. மேலும் பெண்ணின் தகப்பனார் சினிமாப் பாடல்கள் போடக்கூடாது என்று கூறியதால் நாகூர் ஹனிபா பாடல் மட்டும் ஒலிபரப்பப் பட்டுள்ளது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் ”நீங்கள் கைக்கூலி வாங்குவது சரிதான?” என்ற பாடலுக்கு மட்டும் தடை. இது போல் பல திருமணங்கள் நமதூரில் இதற்கு முன் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இஸ்லாம் இசையை தடை செய்கிறது. மேலும் சுற்றியுள்ள மாணவர்கள், நோயளிகளை கருத்தில் கொண்டு அதையும் நிறுத்தியிருக்கலாம். தற்போது நமதூர் மக்களின் கலாச்சார மாற்றத்திற்கு மத்தியில் இது சற்று வேறுபட்ட நடைமுறையே, ஏனென்றால் ஒரு திருமணத்தில் பெண்னும் பெண் வீட்டாரும் சேர்ந்து ”மாடு செத்தா மனுசன் தின்னான் தோழக்கட்ட மேலங்கொட்டி அட்ரா ட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க” என்ற பாட்டுப் போட்டு ஆட்டம் போட்டு அதை வீடியோவும் எடுத்து அவர்களின் ஆவணங்களான திருமண வீடியோவில் உலா விட்ட செய்தி நம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

 

மேலும் ஒரு வித்தியாசமான நடைமுறை என்ன வென்றால், திருமணத்தை நடத்திவைப்பதற்கு வந்திருந்த ஆலிமிடமிருந்து மைக்கை வாங்கி ”நான் எனது மகளை இவ்வளவு மகர் தொகை பெற்றுக்கொண்டு இன்னாருக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன்” என்று கூறியுள்ளார். (நான் அன்னாரின் வக்கீலாக இருந்துக்கு தடை). இதுதான் நபிவழியும் கூட. இச்செயல் ஒரு முன்மாதிரிச் செயலாகவே கருதப்படுகிறது. (இச் செயல் புதிதல்ல என்றும் கடந்த ஒரு வருடமாகவே நடைமுறையில் உள்ளது என்றும் சகோதரர் நிஜாமுதீன் (முஸ்லிம் தர்ம பரிபாலன சபை செயலர்) அவர்கள் கருத்து தெறிவித்துள்ளார்கள்)

 

என்ன ஒரு வித்தியாசம் இதை வேறுயாராவது சொல்லியிருந்தால் ஆலிம்ஷாவும் ஒத்துக்கொண்டிருக்க மாட்டார், ஜமாஅத்தும் ஒத்துக் கொண்டிருக்காது. இது போல் ஒரு சகோதரர் தனது அண்ணன் ஜனாஸா தொழுகைக்கு அனுமதி கேட்டதற்கு இவர்கள் மறுத்துவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் அனுமதித்தாலும் அவர்கள் அனுமதிப்பதில்லை. அல்லாஹ்வே போதுமானவன்......