நமதூரில் பெருகிவரும் கந்துவட்டிக் காரர்களின் ஆதிக்கம்

12/11/2010 10:48

நமதூரில் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துவரும் கந்துவட்டிக் காரர்களின் நடவடிக்கைகளையும், அவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கும் நமதூர் குடும்பப் பெண்களையும் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

 

நமதூரில் தொழில் செய்யும் கடைவியாபாரிகள், ஆட்டு வியாபாரிகள் மற்றும் இதர வணிகர்களால் தமது வியாபாரத் தேவைக்காக பொருளாதாரத்தை வட்டிக்கு கடனாக இராமநாதபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு பைனான்ஸ் கம்பெனி புரோக்கர்களிடம் வாங்குவதும் அதை தினம் 100 அல்லது 50 என்று தாம் வாங்கியிருக்கும் கடனுக்கு ஏற்றார்போல திருப்பிச் செழுத்துவதும் என இந்த தொழில் நமதூரில் துவங்கியது.

 

கடனை வசூல் செய்ய இருசக்கர வாகனங்களில் ஊருக்கும் வளம்வரும் அந்த பைனான்ஸ் கம்பெனி புரோக்கர்கள் சில நேரங்களில் கடனை திருப்பித் தராதவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதும், அதற்க்காக அவர்கள் வரும் நேரங்களில் கடன் வாங்கியவர்கள் தலைமறைவாகிவிடுவதும் வாடிக்ககையாக நடந்துவருகிறது. சிலர் பைனான்ஸ் கம்பெனிக்காரர்களுக்கு கடன் கொடுக்க முடியாமல் கடையை பூட்டியும் உள்ளனர். இன்னும் சிலரது வீடுகளுக்கே சென்று பெண்களிடம் கடன் வசூல் செய்ய முயற்சியும் செய்கின்றனர். நாம் கண்டவரை வீடுகளுக்குள் சென்றே கடன் தொகையை கேட்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

இந்த பழக்கம் கடைகளில் இருந்து கடைகளுக்கு வீட்டு சாமான்கள் வாங்கச் செல்லும் பெண்களுக்கும் தொற்றிக் கொண்டு, கடைகாரர்கள் மூலம் நமதூர் குடும்ப பெண்களும் பைனான்ஸ் கம்பெனிக் காரர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கத் துவங்கிவிட்டனர். கடைக்கு கடன் கொடுக்கும் அதே முறையில் தினமும் 100 அல்லது 50 என வசூலிக்க வீடுகளுக்கே செல்கின்றனர் அந்த இருசக்கர வாகன புரோக்கர்கள்.

 

கடையில் வியாபாரம் செய்பவர்கள் வாங்கினாலும், தினமும் அவர்கள் செய்யும் வியாபாரத்தில் நூரோ ஐம்பதோ ஒதுக்கி அவர்களுக்கு கொடுத்துவிட முடியும், ஒரு நாள் இல்லாவிட்டால் மறுநாள் அதை சேர்த்துக் கொடுத்துவிடலாம். ஆனால் குடும்பப் பெண்களுக்கு தினவருமானமா இருக்கிறது? பெரும்பாலனோரின் கணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர், மாதம் மாதம்தான் பணம் அனுப்புவார்கள் எனும்போது தினமும் கந்துவட்டிக் காரனுக்கு எங்கிருந்து காசு கொடுப்பார்கள். இதையெல்லாம் யோசிக்காமல் கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டு அதை அத்யாவசிய செலவு அல்லது வாழ்வாதாரச் செலவு செய்துவிட்டாலும் பரவாஇல்லை ஆடம்பரச் செலவு செய்துவிட்டு தினமும் வரும் கந்துவட்டி புரோக்கருக்காக தலைமரைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் நமது குடும்ப பெண்கள்.

 

தலைமறைவாகிவிட்டாலும் பரவாயில்லை இது பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும், கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை மாவட்டத்தில் கடனுக்காக பெண்ணின் கற்பை சூரையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். வரும் இளைஞர்கள் மாற்றுமத சகோதரர்களாக இருக்கிறார்கள் அவர்களிடம் இது விசயத்தில் கட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. (முஸ்லிம்களே தவறு செய்யும் போது அவர்களிடம் எப்படி எதிர்பார்ப்பது) கடன் வாங்கியிருப்பதால் மற்றவர்கள் கந்தவட்டிக் காரர்களின் போக்கை கண்டிக்கவும் முடியாதநிலை ஏற்படுகிறது.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டிக் கணக்கு எழுதுபவர்கள் மீதும் சாபமிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி, முஸ்லிம்) மேலும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்றும் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது.

 

திருமறைக்குர்ஆன் வட்டிவிசயத்தில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக எதிராக போர் பிரகடணத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் 2-279 என திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.

 

வட்டி வாங்கினால் மட்டும் தவறு இல்லை கொடுப்பதும், சாட்சியாக இருப்பதும் தவறு அது அல்லாஹ்விடமே போர்செய்யத் தயாராகும் செயல் எனவும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.

 

இப்படிப்பட்ட வட்டியை ஒழிக்கவேண்டும் என்றுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - புதுவலசை கிளை சார்பில் வட்டியில்லா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் நமதூர் மக்களில் சிலர் பயன் பெற்றிருந்தாலும் பெரும்பாலானோருக்கு இந்த திட்டம்பற்றி விழிப்புணர்வு இல்லை. மேலும் சும்மா கடன் தந்தால்தான் வாங்குவார்கள் நம் மக்கள். அதன் விதிமுறைகள் அவர்களுக்கு சிறமமாக இருக்கிறது போல் தெறிகிறது.

 

கந்துவட்டிக் காரர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் சுதந்திரமான போக்குவரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னால் வட்டியிலிருந்து முழுமையாக நம் மக்கள் விடுபட வேண்டும்.

 

வட்டியை தடுப்பதற்க்கான வழி என்ன?

எந்த ஒரு தவறையும் விமர்சனம் செய்வது மிக எளிது ஆனால் அதை தடுப்பதற்க்கான ஆக்கப்பூர்வமான செயல்களை நாம் கையில் எடுத்தால்தான் எந்த ஒரு தீமையும் கட்டுப்படுத்த முடியும். மனிதாபிமான அடிப்படையில் கடன் வழங்குதல், வசதியுள்ளவர்கள் தமது பொருளாதாரத்தில் இருந்து தமது உறவினர்களுக்கு ஜகாத் கொடுத்தல் போன்ற காரியங்காளால் வறுமை மற்றும் மக்களின் அத்யாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியும். இவை எல்லாம் ஒரு சேர நடைமுறைக்கு வந்தால் கண்டிப்பாக வட்டியில்லாத பொருளாதாரத்தை நாமும் அடைய முடியும் இன்ஷா அல்லாஹ்.