பனைக்குளத்தில் 6 நோன்பு பெருநாளில் வாகன அனுமதியில் ஏற்பட்ட பிரச்சனை...

18/09/2010 11:17

நேற்று நம் பகுதியில் 6 நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. பனைக்குளத்தில் கடந்த சில வருடங்களாகவே கடற்கரைக்குச் செல்லும் வாகனங்களுக்கு பெருநாள் தினத்தில் சில வரம்புகள் விதிக்கப்படும். அதனடிப்படையில் கடற்கரைக்கு செல்லும் வாகங்கள் முக்குரோடு வரை அனுமதிக்கப்பட்டும் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கடற்கரைவரை அனுமதிக்கப்பட்டும் இருந்தது.

தாமரைஊரணியை சேர்ந்த ஒரு லோடு ஆட்டோ டிரைவர் இந்த வரம்மை மீறி கடற்கரையிலிருந்து ஆட்களை ஏற்றிவந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த பனைக்குளம் ஜமாஅத் நிர்வாகிக்கும் ஆட்டோவில் இருந்த 4 போருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் இராமநாதபுரத்திலும் மற்றொருவர் மதுரையிலும் சகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் கலவரச்சூழல் ஏற்பட்டுள்ளது. இருபுரமும் 4 பேர் வீதம் 8 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இருகிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிஜாம் டிராஸ்போர்ட் மற்றும் சுல்தான் டிராஸ்போர்ட் ஓடவில்லை.

இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தி அஹமது பசீர்