பிகாரில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் பதவி தர தயார் - ராம்விலாஸ் பாஸ்வான்

30/08/2010 10:20

பிகாரில் அடுத்த தேர்தலில் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு கொடுப்பது பற்றி பரிசீலிப்போம்  என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார்.

 பாஸ்வான், தனது சகோதரர்  பசுபதி குமார் பரஸ துணை முதல்வர் பதவியில் அமர்த்தப் பார்க்கிறார். எமது கூட்டணி வென்றால் முஸ்லிமுக்கு முதல்வர் பதவி என அறிவித்த பாஸ்வான் இப்போது அதுபற்றியே பேசாமல், துணைமுதல்வர் பதவியையும் தனது சகோதரருக்கே கொடுத்திட போராடிவருகிறார் என ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன.

இந்நிலையில்  நிருபர்களிடம் சனிக்கிழமை பாஸ்வான்  கூறியதாவது: எமது கூட்டணி தேர்தலில் வென்றால் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பது பற்றி பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்.  பிகாரிலும் பிற இடங்களிலும் உள்ள முஸ்லிம்கள் முன்னேற்றம் காண எமது கூட்டணி அயராது பாடுபடுகிறது என்றார் பாஸ்வான்.