பிரான்சில் முகத்திரைக்கு தடைவிதிக்கும் சட்டம் அமல்

15/09/2010 11:20

பிரான்சில் முகத்திரைக்கு தடைவிதிக்கும் சட்டம் அமல்

கடந்த சில மாதங்களாகவே முஸ்லிம் பெண்கள் புர்கா உடன் முகத்திரை அணிவது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சர்சையக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அன்வதர்க்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

இந்த சட்டத்தின் அடிப்பாடையில் பிரான்சில் பொது இடங்களில் எங்கும் முகத்திரை அணியக்கூடாது. வீதிகளிலோ, அரசு அலுவலகங்களிலோ, வணிக வளாகங்களிலோ அல்லது கேளிக்கை விடுதிகளிலோ முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யுரோ அபராதம் விதிக்கப்படும். இந்த தடையை மீறி ஒரு ஆண் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி முகத்திரை அணியசொன்னல் அந்த ஆணுக்கு 30 ஆயிரம் யுரோ அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

இது பதுகப்போ மதமோ சம்மந்தப்பட்டது அல்ல என்றும் மாறாக போதுவிதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய ஒன்று என்றும் சட்டத்துறை அமைச்சர் ஆளியோட் மேரி தெரிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ் ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் அணைத்து மதங்களுக்கும் சம மதிப்பளிக்கப்படும் என்றும் அனால் விரும்பியோ கட்டயப்படுதப்பட்டோ முகத்தை மறைப்பது  சமூக நடைமுறைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் சில பகுதிகளில் சர்ச்சை இருந்து வருகிறது.

இதற்க்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, ஐரோப்பாவில் மிகப்பெரிய சிறுபான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை என விமர்சனம் செய்துள்ளது. பிரான்ஸ் எதிர்கட்சி தரப்பில் இந்த நடவடிக்கை பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை விதிகளை தகர்க்கும் வண்ணம்  உள்ளதாக விவாதிக்கப்பட்டுள்ளது.

https://gulfnews.com/news/world/other-world/french-parliament-adopts-ban-on-full-face-veil-1.682255

முகத்தை மறைப்பது இஸ்லாமிய மார்கத்தில் கட்டாயம் இல்லை என்றாலும் விரும்பினால் பாதுகாப்பு கருதி அணிந்துகொள்ள தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.