புதுவலசை.இன் இணையதளம் சம்மந்தமான ஜும்ஆ பயான்

08/12/2010 15:53

கடந்த 26-11-2010 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் சகோதரர் அஹமது அமீன் ஆலிம் அவர்கள் புதுவலசை.இன் இணையதளத்தில் உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிடுவதாகவும், தனிமனிதர்களை விமர்சிப்பதாகவும் ஒரு தகவலை மக்கள் முன் வைத்துள்ளார்கள்.

 

புதுவலசை.இன் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் அனைத்தும், கிடைத்த உடனேயே வெளியிடுவதில்லை. அதை உண்மையா என ஆராய்ந்து நாலு பேரிடம் விசாரித்துத்தான் வெளியிடுகிறோம். அதோடு மட்டும் அல்ல வெளியிடப்படும் செய்தியால் நம் சமுதாயத்திற்கு ஏற்படும் சாதக பாதகங்களைப் பற்றியெல்லாம் கருத்தில் கொண்டுதான் வெளியிடுகிறோம். மேலும் ஏதேனும் ஒரு தனிப்பட்ட நபர் நம்மந்தப்பட்ட செய்திகளைப் பொருத்தவரை, அவருக்கும் அவரது மான மரியாதைக்கும் ஏற்படும் சாதக பாதகங்களை கருத்தில் கொள்கிறோம். ஒரு தனிமனிதனுக்கு ஏற்படும் தீமையை விட சமூகத் தீமை பெரிதாக இருக்கும் பட்சத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி சமூக நலனை கருத்தில் கொண்டு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதில் சில உண்மைகள் சிலரை காயப்படுத்தவும் செய்யலாம். அதற்காக நாம் வருத்தம் தெறிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் அது போன்ற செய்திகளை நிறுத்தும் நோக்கம் இல்லை.

 

சகோதரர் அஹமது அமின் ஆலிம் அவர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். புதுவலசையில் பெரும்பாலான மக்களின் நம்பிக்கைக்குறிய பேஸ் இமாம் அவர்கள் பல்வேறு தவறான காரியங்களை செய்து வருகிறார், ஹஜ்ஜுக்கு சென்றுவந்த ஒரு சகோதரர் இன்னும் தர்ஹாவுக்கும், மௌலீது ராத்திபுக்கும், கத்தம் பாத்திஹாவுக்கும் மற்றும் ஜமாஅத் நிர்பந்தம் என்றும் தமது இறையச்சத்தை இழந்து கொண்டு இருக்கிறார். இதை நாம் சுட்டிக்காட்டியதால் நம்மயையும் நமது இணைய தளத்தையும் விமர்சனம் செய்கிறார்.

 

புதிய சர்ச்சை

இத்துடன் முடிந்து விடும் என்று நினைத்தோம், ஆனால் தற்போது அவரைப்பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலும் பல நாட்களாக பல பேரிடம் விசாரித்த பின்பே வெளியிடுகிறோம். இனிமேலாவது அவர் தமது அமல்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், இதனால் ஏற்படும் சமூக சீர் கேட்டையும் கருத்தில் கொண்டுதான் இந்தத் தகவல் வெளியிடப்படுகிறது.

 

கடந்த காலங்களில் மார்கத்தின் பெயரால் பல புதிய செயல்களை செய்து வருமானம் பார்த்து வந்த இவர்கள் தற்போது திருமணத் தரகர் வேலையும் செய்து வருவாதாக தெறிகிறது. அது மட்டுமில்லாமல் தமது நண்பர்களின் வீட்டு திருமண பிரச்சனைகளைப் பேசுவதும், வரதட்சனையை முடிவு செய்வதும், இன்னும் மேலே போய் பேசிய வரதட்சனையை தம் கைகாளாலேயே வாங்கி கொடுத்தும் வருகிறார்.

 

சமூக அவலம்

இதற்கு முன் நமது இணைய தளத்தில் மதம் மாறிய புதுவலசை பெண் என்ற செய்தியை பார்த்து பல்வேறு நண்பர்கள் இங்கும், வெளிநாடுகளிலும் நம் இணையதள செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டனர், எப்படி நடந்தது என்று நாம் விசாரித்த வகையில் அந்தப் பெண் 4 சகோதரிகளுடன் பிறந்து, மார்க்கப்பற்று இல்லாமல், தகப்பன் சரியில்லாமல் குடும்பம் படும் கஷ்டத்தை போக்க வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளார். அதை விட மிக முக்கியமான காரணம் ”வரதட்சனை”. நமது குடும்பத்தாரால் இலட்சக் கணக்கில் கொடுத்து மாப்பிள்ளை வாங்க முடியாது என்று சூழலும் அந்தப் பெண்னை வெளியேற பணித்துள்ளது. மேலும் அந்த செய்தியை கேட்டு ஒரு பிரச்சனை முடிந்தது என ஆசுவாசப் பட்டுக்கொண்ட குடும்பத்தார் இதை பெரிய பிரச்சனையாக ஆக்காமல் இருந்திருக்கிறார்கள்.

 

நோக்கம்

மார்க்கம் படித்த ஆலிம்களே வரதட்சனையை பேசி, வாங்கிக் கொடுக்கும் நிலை இருந்தால் எப்படி வரதட்சனை என்ற தீமையை இந்த சமூகத்தில் இருந்து அகற்ற முடியும். அல்லது எப்படி சம்மந்தப்பட்டவர் வரதட்சனைக்கு எதிராக பேசுவார்? அப்படியும் அவர் பேசினால் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

 

ஆலிம்களிடம் கேட்டால் ஜமாஅத் சொல்கிறது நிர்பந்தம் என்று சொல்லும் நிலை, ஜமாஅத்தோ இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மகமையைக் கொடு கல்யாணம் செய்து வைக்கிறோம் என்று சொல்லும் நிலை. ஊரில் ஒவ்வொருவரும் ஏதே ஒரு விதத்தில் வரதட்சனையால் பாதிக்கப் பட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். இதற்கொல்லாம் யார் காரணம், இமாம்களா அல்லது ஜமாஅத்தா அல்லது எதையும் அறியாத மக்களா?

 

தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்..............

குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும்............

பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்............

இன்ஷா அல்லாஹ்.......