பூஜை செய்யும் ஹாஜிகள் - ஜும்ஆ பயான்

13/12/2010 14:24

இந்த மாதம் முதல் வெள்ளிக்கிழமை, சகோதரர் காதர் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் செய்த பயானில் ”புதித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு வந்த ஹாஜிகள் கோவில்களுக்கு தேங்காய், பழம் மற்றும் மாலைகள் வாங்கிக் கொடுப்பதாகவும் அது தொடர்ந்து கொண்டும் இருப்பதாகக் கூறி மன வேதனைப்பட்டார்”.

 

நமதூர் மக்கள் கோவில்களுக்கு பூஜைக்கான சாமான்கள் வாங்கிக் கொடுப்பதும், அங்கு சென்று வருவதும் வாடிக்கையாக உள்ளது. சத்தரத்து ஐயா என்றும், பட்டானிச்சி அம்மா என்றும் இன்னும் பல பெயர்களில் நேர்ச்சை செய்தும், விசிட் அடித்தும் வருகின்றனர். இதெல்லாம் மிகப்பெரிய பாவம் அல்லஹ் இந்தப்பாவத்தை மன்னிக்கவே மாட்டான். என்றும் எச்சரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

 

இஸ்லாமிய அடிப்படையில் வணக்க வழிபாடுகள்

 

மிக முக்கியமான வணக்கம் என்பது அல்லாஹ்வை மட்டும் வணங்குவதும் அவனுக்கு எதையும் எந்த வகையிலும் இணைகற்பிக்காமல் இருப்பதும் அதே போல அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவதும்தான். இதைத்தான் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சொல்கிறோம், உள்ளத்தில் ஏற்றும் இருக்கிறோம், ஆனால் கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடிப்பதில்லை என்று சொல்வதை விட நமக்கு முறையாக கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆகையால் நமது முன்னோர்கள் மற்றும் ஆலிம்கள் சொல்வது அல்லது செய்வது எல்லாம் நாமும் செய்யத் துவங்கியதன் விளைவு இன்று அதையும் தாண்டி மக்கள் சென்று விட்டார்கள்.

 

அல்லாஹ்வுடைய சொல்லுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் சொல்லுக்கும் கட்டுப்பட்டு, அவை இரண்டை மட்டுமே நமது வழிகாட்டலாக எடுத்துக் கொள்ளவேண்டிய முஸ்லிம்கள் நம்பிக்கைகளுக்கும், ஆலிம்களுக்கும், முன்னோர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததின் விளைவு இன்று மக்காவிற்கு சென்ற பிறகும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர். நிரந்தர நரகத்திற்கு தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

 

இஸ்லாமிய அடிப்படையில் தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் தவிர, பிரார்த்தனையும் வணக்கம் அதை அல்லாஹ்விடம் மட்டும் தான் கேட்க வேண்டும் அதே போல் செல்வம், குழந்தை, நோய் நிவாரணம், கல்வி, அறிவு, ஆட்சி அதிகாரம், ஏதேனும் ஒரு காரியத்தில் ஏற்படும் வெற்றி தோல்வி போன்றவையெல்லாம் அல்லாஹ்வுடைய அதிகாரங்கள். இந்த அனைத்தையும் தருவதும், இல்லாதவர்களுக்கு வழங்கத் தகுதியானவனும் அகில உலகத்தையும் படைத்து பராமரித்து பாதுகாக்கும் வல்ல அல்லாஹ்வேயாகும். (இவை அனைத்தும் அல்லாஹ்வை நம்புதல் என்ற இஸ்லாமிய அடிப்படையில் உள்ளது - நமக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தால்தானே தெறியும்). அதே போன்று நேர்ச்சை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கமாகும் இதை அல்லாஹ் அல்லாதவர்களுக்காக செய்தால் அது இ்ணைவைத்தல். இணைவைத்துவிட்டால் நிறந்தர நரகம். அதே போல் சத்தியம் செய்தல், அல்லாஹ்வின் மீதானையாக என்று மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.

 

இவையல்லாது அல்லாஹ் அல்லாத சத்தரத்து முனியிடமோ, அரபியப்பாவிடமோ, முஹைதீனிடமோ, நாகூருக்குச் சென்றோ, ஏர்வாடிக்குச் சென்றோ, பட்டானிச்சியம்மாவிடமோ கேட்பதும் அல்லது அவர்களுக்காக நோச்சை செய்தாலோ அல்லது அவர்கள் மீது சத்தியம் செய்தாலோ அல்லது அவர்களுக்கு அதீத சக்தி இருக்கிறது என்று நம்பினாலோ, அவர்களுக்கு நாம் கேட்பது தெறியும் என நினைத்தாலோ அது மிகப்பெறிய தவறாகும். இது போன்ற செயல்களால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை மற்றுவர்களுக்கு செழுத்திவிட்டீர்கள் என்றால் அதுவும் இணைவைத்தலாகிவிடும் அதே போல் அல்லாஹ்வுடைய பண்புகளான அனைத்தையும் செவியேற்பவன், பாதுகாப்பவன், அருளாளன் போன்ற பண்புகள் மற்றவர்களுக்கு உள்ளது என நினைத்தாலோ நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து விட்டதாகிவிடும்.

 

ஆலிம்களைப் பொருத்தவரை தம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் எனவும், பொருளாதாரம் பாதிக்கக் கூடாது எனவும் நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி எந்தக் கவலையும் அவா்களுக்கு இல்லை. தர்ஹாக்களில் நடக்கும் செயல்கள் தவறு என்று தடுக்க மறுக்கும் இவர்களுக்கு கோவில்களுக்கு போவதை தடுக்க முடிகிறது என்றால் அவர்களுடைய சுயநலம் தவிர வேரெந்தக் காரணமும் இல்லை, ஊரில் பிரச்சனை வரும், ஜமாஅத் வேலையிலிருந்து தூக்கிவிடும் என பயந்து கொண்டு சொல்ல மறுக்கின்றனர். இன்னும் சிலர் அப்பாவிகள் அவர்களுக்கு 7 வருடம் மார்கம் படித்தும் இவையெல்லாம் தவறு எனறு கூடத் தெறியாது.

 

ஏனென்றால் ஆலிம்களிடம் இது சம்மந்தமாக பல முறை பேசியும் அவர்களிடமிருந்து வந்த பதில் பெரும்பாலும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு நமதூர் ஆலிமிடம் மௌலீது சிர்க் இல்லையா என்று கேட்டதற்கு இல்லை பித்அத் (புதிய அனாச்சாரம்) என்று கூறினார். மௌலீது வரிகளில் சிர்க் வார்த்தைகள் உள்ளதை அடிப்படையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர் தெளிவாக பித்அத் என்று கூறினார். ஆனால் அவரே அதை ஓதவும் செய்கிறார். ஏன்?

 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அனைத்து பித்அத்தும் வழிகேடு, அனைத்து வழிகேடும் உங்களை நரகத்தில் கொண்டு சேக்கும் - நூல் நஸயி. 

 

இந்த ஹதீஸ் தெறியாதவரா அவர்?

 

அவர்களைப் பொருத்தவரை அல்லாஹ்வைவிட, அவனது தூதரை விட பொருளாதாரம் பெரிதாகி விட்டது காரணம் அவர்கள் தமது வாழ்வாதாரத்தின் அடிப்படையாக இமாமத் வேலையை அமைத்துக் கொண்டதுதான். அதன் விளைவாக அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களையும் தெறிந்தே வழிகெடுத்து வருகின்றனர். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அல்லாஹ்வுடைய பிடி மிகக்கடுமையானது.

 

அதே போல் தர்ஹாக்களில் சென்று அவ்லியாவிடம் பிரார்தனை செய்யக் கூடாது என்பதை ஒப்புக் கொண்ட ஆலிம், நாங்கள் தர்ஹாக்களில் சென்று அல்லாஹ்விடம்தான் பிரார்தனை செய்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் மக்கள் அவ்லியாவிடம் பிரார்தனை செய்கிறார்களே என்று கேட்டதற்கு, மக்கள் செய்வதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் என வாதிடுகிறார்கள். இதைத்தான் நாம் குறிப்பிட்டோம், தங்களை காத்துக்கொண்டால் போதும் மக்களை பற்றிக்கவலை இல்லை. மக்கள் செய்வதற்கு நீங்கள் பொறுப்பில்லையா என்று கேட்டதற்கு நாங்கள் சொல்லத்தான் முடியும் என பதிலளிக்கிறார்கள். இவர்களை நம்பி நம் அமல்களை அமைத்துக் கொண்டால் நம் நிலை என்ன என்பதை மக்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

 

இதை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்களை மறுமையின் பக்கம் அழைப்பதும், மறுமைப்பலன் பாலாகிவிடுமே என கவலைப்படுவதும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. மக்கள் தவறு செய்யும் போது அவர்களை நேர்வழியில் செழுத்த சம்மந்தப்பட்டவர்கள் தவறும் பட்சத்தில் அதை முறையாக சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் உரிமையும் ஒவ்வெறு முஸ்லிமுக்கும் இருக்கிறது.