பெண்களுக்கு வியர்ப்பது குறைவு: ஆய்வு தகவல்

09/10/2010 20:42

 

பெண்களுக்கு வியர்ப்பது குறைவு: ஆய்வு தகவல்

 

 

அக்.8: ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு என்பது தெரியவந்துள்ளது.

 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடல் உழைப்பு அதிகரிக்கும் போதும், வெப்பமான இடத்தில் செல்லும் போது வியர்வை வெளியேறுவது வழக்கம். உடல் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காமல் இருப்பதற்காக இயற்கையாகவே அனைவருக்கும் வியர்க்க தொடங்கி விடும்.

 

ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளர். ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

 

ஒரே மாதிரியான வெப்பநிலை உள்ள இடத்தில் ஆண்களையும், பெண்களையும் தனித்தனியாக சைக்கிள்களை ஓட்டச் செய்தனர். இருபிரிவினரும் ஒரு அளவு நேரம் சைக்கிளில் சென்றபோதிலும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே வியர்வை வெளியேறியது.

 

பெண்கள் உடலைவிட ஆண்கள் உடலில் நீர்சத்து அதிகம். இதனால்தான் ஆண்களுக்கு எளிதில் வியர்த்து விடுகிறது. தவிர ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான ஹார்மோன் வேறுபாடும் இந்த வியர்வை அளவு வேறுபாட்டுக்கு ஒரு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

அதிக வெப்பமான இடங்களில் செல்லும் போது வியர்வை வெளியேறுவதன் மூலம் தான் உடலில் வெப்பநிலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இதுபோன்ற சமயங்களில் பெண்களுக்கு வியர்வை போதிய அளவு வெளியேறாது. இதனால் அவர்களால் வெப்பநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதனால் வெப்பநிலை அதிகமுள்ள இடங்களில் பயணிக்கும் போது பெண்கள் எளிதில் களைப்படைய வாய்ப்புகள் உள்ளன.÷பெண்கள் கடுமையாக வேலை செய்தாலும் அவர்களுக்கு எளிதில் வியர்ப்பதில்லை. ஆனால் ஆண்களாக இருந்தால் எளிதில் நெற்றி வியர்வையை நிலத்தில் கீழே விழச்செய்து தங்கள் "உழைப்பை' வெளிப்படுத்தலாம்.
 
Dinamani