பைகா (BICA) விளையாட்டுப் போட்டிகள்

07/11/2009 15:57

 

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

7-11-2009
 
மத்திய அரசு நிதியில் நடத்தப்படும் பைகா (BICA) விளையாட்டுப் போட்டிகள் மாவட்டம் தோரும் நடத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் நான்கு பிரிவுகாளக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5-11-2009 வியாழக்கிழமை நடைபெற்றது இதில் 26 ஊராட்சிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் நமதூரிலிருந்தும் சகோதரர் முத்து முருகன் அவர்களின் (அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியின் புதிய விளையாட்டு ஆசிரியர்) முயற்சியில் அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்களும் படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு சுமார் முப்பது வீரர் வீராங்கனைகள் புதுவலசை ஊராட்சி சார்பில் கலந்து கொண்டனர்.

 
பல்வேறு தடகளப் போட்டிகளில் நமதூர் வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

 
1. தொடர் ஓட்டம் 400 மீ - முதல் பரிசு
     கலந்து கொண்டவர்கள் 1. முஹம்மது அஸ்வர் தீன், 2. சேக் ஜாபர், 
                                                           3. சமீர் ரோஷன், 4. ஜாவித் அஸாம் ஆகியோர்

2. 100 மீட்டர் ஓட்டம் -   முதல் பரிசு - சேக் ஜாபர்

3. தொடர் ஓட்டம் 4 - 100 மீ - மூன்றாம் பரிசு 
கலந்து கொண்டவர்கள் 1. நவ்சாத் கான், 2. முஹம்மது அயாஸ்
                                                              3. சுல்த்தான், 4. ஜாபர் சல்மான்

4. தட்டு எறிதல் -             முதல் பரிசு - அக்ரம் ஜாவித்
                                                  இரண்டாம் பரிசு - ஜாவித் அஸாம்
                                                  மூன்றாம் பரிசு - முஹம்மது அஸ்வர் தீன் 
    (மூன்று பரிசுகளையும் நமதூர் வீரர்கள் தட்டிச் சென்றது குறிப்பிடத் தக்கது)

5. குண்டு எறிதல் -          முதல் பரிசு - அக்ரம் ஜாவித்

6. உயரம் தாண்டுதல் - முதல் பரிசு - ஜாவித் அஸாம்
                                                  இரண்டாம் பரிசு - ஜமீர் அலி

 
மேலும் மாணவிகளும் தங்கள் பங்களிப்பு மூலம் தடகலப் போட்டிகளில் 100மீ, 400மீ, தொடர் ஓட்டம், நீலம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குழுவிளையாட்டுக்களில் வாலிபால், கபடி, கோ கோ மற்றும் புட்பால் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளனர். கலந்து கொண்ட 26 ஊராட்சிகளில் 96 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தையும் புதுவலசை ஊராட்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

 
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெணகலப் பதக்கங்களும் ரூ.50 ரொக்கமாகவும் வழங்கப்பட்டது. மேலும் புதுவலசை ஊராட்சி விளையாட்டு துறை மேம்பாட்டுக்காக ஊராட்சி மன்றத்திற்க்கு ரூ. 20000 (இருபதாயிரம் ரூபாய்) வழங்கப்பட உள்ளது. இரண்டாம் பரிசு ரூ 12000  பரிசுத் தொகையுடன் மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி பெற்றது.