மண்டபம் யூனியனில் ஊராட்சி உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு பயிற்சி

28/10/2010 14:05

பனைக்குளம்,அக்.28-

 

மண்டபம் யூனியனில் ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் மக்கள் நலப்பணி யாளர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வர்களுக்கு யூனியன் தலைவர் கலைமதி ராஜா சான்றிதழ் வழங்கினார்.

 

சிறப்பு பயிற்சி

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனை சேர்ந்த ஊராட்சி உதவியாளர்கள் மற் றும் மக்கள் நலப்பணியாளர் களுக்கான சிறப்பு பயிற்சி உச்சிப்புளியில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற் றது. பட்டுக்கோட்டை மண் டல ஊரக வளர்ச்சி நிறுவனத் தின் சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த ராஷ்டிரிய கிராம் சுவராஜ் யோஜனா பயிற்சியில் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணி யன், பட்டுக்கோட்டை பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த கவுத மன் ஆகியோர் ஊராட்சியின் வரலாறு, 73, 74-வது திருத்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் ஆகியவை குறித்து விரி வான பயிற்சி அளித்தனர்.

 

இதில் ஊராட்சி உதவியா ளர்கள் பட்டணம்காத்தான் நாகேந்திரன், தாமரைக்குளம் ராஜேந்திரன், பனைக்குளம் ரோகினி, நொச்சியூரணி கருணாமூர்த்தி, வெள்ளரிஓடை தேவகி, புதுவலசை இந்திரா, சாத்தக்கோன் புல்லாணி குமார், வாலாந்தரவை அர்ச்சு ணன், இருமேனி புல்லாணி, ரெட்டையூரணி கோகிலா, கும்பரம் அப்பாஸ்குமார், பெருங்குளம் முகமது அல் ஹர்தீன், பாம்பன் விசுவநா தன், தங்கச்சிமடம் கதிரேசன், பிரப்பன்வலசை பன்னீர் செல் வம், தேர்போகி வினோத் கண் ணன், புதுமடம் நாகேந்திரன், வேதாளை ராமநாதன் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி யொட்டி நடைபெற்ற போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட் டது. மேலும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யூனியன் தலைவர் கலைமதி ராஜா சான்றிதழ் வழங்கி னார்.