மதம்மாறிய புதுவலசை பெண் - அதிர்ச்சி தகவல்

24/11/2010 15:42

அபுதாபி NCE நிறுவனத்தில் பணியாற்றி வரும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில RSS இயக்கவாதிகளால் பெருமையாக பேசிக்கொள்ளப்பட்ட ஒரு தகவலை அபுதாபி சகோதரர்கள் மூலமாக நமதூர் சகோதரர் ஒருவருக்கு தகவல் கிடைக்க, அவர் நம்மை தொடர்பு கொண்டு நம்மிடம் தெறிவித்தார். முதலில் அந்தச் செய்தி பொய்யாக இருக்குமோ என்று தோன்றியது. பின் நமதூர் மக்களை தொடர்பு கொண்டு கேட்டதில் உண்மை என உறுதி செய்யப்பட்டது.

 

அந்தச் செய்தி என்ன வென்றால் இராமநாதபுரம் மாவட்டத்தில் RSS செயல்பாடுகள் சம்மந்தமாக சிலர் பேசிக் கொண்டு இருக்கும் போது காதல் வலையில் முஸ்லிம் பெண்களை விழவைத்து மதம் மாற்றும்  RSSன் செயல்பாடுகள் பற்றியும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அதில் புதுவலசையை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் ஒரு RSS தொண்டரை திருமணம் முடித்துக் கொண்டு, இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும் அவர் இப்போது பொட்டு வைத்து கோவில்களுக்கு சென்று வருவதாகவும் பேசிக் கொண்டனர். என்பது தான் அந்தச் செய்தி.

 

கடந்த 2 அல்லது 3 மாதங்களுக்கு முன் நமதூரைச் சேர்ந்த ஒரு குடிகாரத் தந்தைக்கு பல சகோதரிகளுடன் பிறந்து, குடும்ப கஷ்டத்திற்காக இராமநாதபுரத்தில் வேலைபார்த்து வந்த ஒரு பெண் மாயமானதாகவும் அவர் தற்போது சென்னையில் இருப்பதாகவும் தெறியவந்தது. அந்தப் பெண் ஒரு மாற்றுமத இளைஞருடன் தலைமறைவாகி பின் திருமணம் செய்துகொண்டதாக தெறிகிறது. இந்த இரண்டு சம்பவத்தையும் வைத்து அபுதாபியில் பேசிக்கொண்ட சம்பவமும் அந்த பெண்பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிந்தது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன், நமதூரைச் சோந்த, இராமநாதபுரத்தில் வேலை பார்த்துவந்த ஒரு பெண்ணின் தவறான நடவடிக்கையை கண்டித்து அவரை சில இளைஞர்கள் தாக்கியதும், அதே போன்று இன்னொரு பெண்ணை மாற்று மத இளைஞனுடன் இராமநாதபுரத்திற்கு வெளியே மடக்கி பிடித்து வீட்டிற்கு தகவல் கொடுத்து திருப்பி அனுப்பியதும் என்று இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாகத்தான் ஒரு பெண் மதம் மாறியுள்ளார்.

 

மேலும் படிக்கச் செல்லும் சில பெண்கள் மீதும் இதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றச்சாட்டு வருகிறது. இது வெல்லாம் போதாதென்று நமதூர் முஸ்லிம் இளைஞர்களே பெண்களை தவறான வழிக்கு இழுத்துச் சென்ற கொடுமையும் நடந்தேரியுள்ளது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

 

இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற காரணங்கள் என்ன? என்று பார்த்தால்

1. அடிப்படை இஸ்லாமிய அறிவே இல்லாமல் இருக்கும் தாய்மார்கள், தந்தையர் மற்றும் குழந்தைகளுக்கு இறையச்சம் மற்றும் ஒழுக்க நெறிகள் தெறிவதில்லை. அல்லாஹ் திருமறைக் குர்ஆனில், யாரிடம் எப்படி பழகுவது, யார் யாரெல்லாம் ஒரு பெண்னுக்கு அந்நிய ஆண், அவர்கள் முன் செல்லும் போது எப்படி ஆடை அணிவது, எப்படிப் பேசுவது என்றெல்லாம் தெளிவாக குறிப்பிடுகிறான். (பார்க்க சூரத்துந் நிஸா 4ஆவது அத்தியாயம்) இவையெல்லாம் ஒவ்வெரு பெற்றொரும் தானும் கற்று தம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியவை.

 

2. இந்த அடிப்படை அறிவில்லாமல் இளம் வயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது, சூதாட்த்தில் மூழ்கிகிடப்பது, குடும்பத்திற்கு போதுமான சம்பாத்தியத்தை கொடுக்காமல் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது, குடும்பத்துடன் சினிமா அல்லது சீரியலில் மூழ்கிக் கிடப்பது, நவீன சாதனமான செல்போன் பயன்பாடு, மனைவி குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டுப் போய்விடுவது மற்றும் இளம் வயதில் தாய் அல்லது தந்தை இறந்து விட்டால், பிள்ளைகளை முறையாக பராமரிக்காமல் விட்டுவிடுவது. 

 

3. வரதட்சனை- பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் கூலி. மேற்கூறிய அனைத்து காரணங்களையும் விட இந்த காரணம் தான் இன்று பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுப்பதில் பெற்றோருக்கு ஏற்படும் சிரமம். பல பெண்கள் தமது இளம் வயதில் திருமணம் முடித்துக் கொடுக்க முடியாத தாய் தந்தையை விட்டுவிட்டு வேறு முடிவைத் தேடிக்கெள்வதற்கு இது பெரும் காரணமாக திகழ்கிறது.

 

4. இஸ்லாம் கடமையாக்கியுள்ள வழிமுறைகளை புற்ககணித்து, வட்டி வாங்குதல் கொடுத்தால், பெருளாதாரத்தை வீண்விரயம் செய்தல், அந்நிய ஆண்களை வீடுகளுக்குள் அனுமதித்தல், குடிபோன்ற தவறான பழக்கத்திற்கு அடிமையாகுதல், அழகிய முறையில் செந்த பந்தங்களுக்கு கடன் தற மறுத்தல் மற்றும் வசதியுள்ளவர்கள் வரியவர்களுக்கு ஜகாத் கொடுக்க மறுத்தல் போன்றவையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் சமூகத்தில் இதுபோன்ற தீமைகள் வளரக் காரணமாகிவிட்டது.

 

இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் முஸ்லிம்களுக்கு கொண்டு சேர்ப்பதுதான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்னைப்பற்றி ஒரு செய்தியை நீ கேட்டால் அதை மற்றவர்களுக்கு செல்லிவிடு என்று, ஆனால் இங்கோ சொல்பவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு வருகின்றனர். அல்லாஹ்வுக்கும் மறுமைக்கும் பயந்தால் தான் ஓரளவுக்கு இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும். ஆண்கள் ஜும்ஆ தினங்களிலாவது இஸ்லாத்தை பற்றி தெறிந்து கொள்ளவும் மற்ற நண்பர்களின் மூலம் தெறிந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் பெண்களுக்கு அப்படிப்படட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சிலர் தமக்கு தெறிந்தது தான் இஸலாம் என்று நினைக்கின்றனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

 

ஓடிப்போகும் பெண்களில் பெரும்பாலானோர் தம் இளம் வயதில் ஏற்படும் எதிர்பால் ஈர்ப்பில்தான் (Infatuation) செல்கின்றனர், அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு இல்லாமல் போய்விடுகிறது. காரணம் சினிமா போன்ற சாதனங்களை வீட்டில் தனிமையில் இருந்து கொண்டு பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் பார்கின்றனர். அவர்களின் மனதில் சினிமாவில் வந்த ஆபாசக் காட்சிகள் குடியேறி விடுகின்றது. படிக்கும் காலங்களில் கிடைக்கும் தவறான நட்பினாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது.

 

நம்மக்களுக்கு ஒழுக்கம் பற்றியோ இஸ்லாம் பற்றியோ எடுத்துரைத்தல் கோபம் வருகிறது காரணம் நங்கள் ஒழுக்கமில்லாதவர்களா? அல்லது இஸ்லாத்தை தெறியாதவர்களா? என்று கேட்கின்றனர். இது போன்றவர்களாலும் இஸ்லாம் பெரும்பான்மையான மக்களுக்க சென்று சேர்வதில்லை. இன்னும் சிலரோ இஸ்லாத்தை சொல்பவர்களை இயக்க பிரச்சாரம் செய்பவர்களைப் போல் பார்கின்றனர்.

 

சமூகத்தில் நிகழும் அனைத்து தீமைககுக்கும் இஸ்லாம் ஒன்றே தீர்வு. முஸ்லிம் என்று பெறுமைப் படுவதற்க்கும், இஸ்லாம் கூறும் சான்றுகளை கொண்டு மார் தட்டிக் கொள்வதையும் மட்டும் கொள்கையாகக் கொள்ளாமல் அதை அறியாத முஸ்லிம்களுக்கு எடுத்துரைக்க முயற்சி செய்வோம். அதன் மூலம் மறுமை மற்றும் சமூகம் பற்றிய வழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இன்ஷா அல்லாஹ்.....