மத்திய அரசு திட்டம் மூலம் சிறுபான்மையினத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை

16/08/2010 10:42

 

மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் சிறுபான்மையின மாணவிகள் படிப்பை தொடர உதவி தொகை வழங்கப்ப டுகிறது.

கல்வி உதவி தொகை

கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி தொடர்ந்து படிக்க இயலாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவி களுக்கு உதவும் வகையில் மத் திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவி தொகை திட்டத்தை ஏற்படுத்தி உள் ளது. இத்திட்டம் மூலம் தமிழ கத்தில் வசிக்கும் இஸ்லாமி யர், கிறிஸ்தவர், சீக்கியர் மற் றும் புத்த மதங்களை சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாண விகளுக்கு ரூ.12 ஆயிரம் உதவி தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.

இதில் கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள், உண்டி உறை விட கட்டணங்களும் அடங் கும். தமிழகத்தில் மட் டும் இத்திட்டத்தின் கீழ் 692 பேருக்கு கல்வி உதவி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

விண்ணப்பம்

இந்த கல்வி உதவி தொகை பெறுவதற்கு மாணவிகள் 10ம் வகுப்பில் குறைந்த பட்சம் 55 சதவீதம் மதிப்பெற்று நடப்பு ஆண்டு மத்திய-மாநில அர சால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 11ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். இவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இதற்கான உரிய சான்று களை விண்ணப்பத்துடன் இணைத்து வருகிற 20-ந் தேதிக்குள் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் மாணவி கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் ஹரி கரன் தெரிவித்தார்.