முடிவுக்கு வருகிறது எகிப்து பிரச்னை

06/02/2011 22:29

எகிப்தில் கடந்த 13 நாட்களாக அதிபர் முபாரக் ஹோசினிக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் முடிவு நிலைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டத்தையடுத்து அரசும், எதிர்கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கு ஓப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி பிரச்சனைக்கு தீர்வு காண குழு ஒன்று அமைக்க இரு தரப்பும் ஒப்பு கொண்டது. அரசியல் சீர்திருத்தங்களை பற்றி குழு ஆராயும். இந்த குழுவில் நீதித்துறை மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பர். அரசியல் சீர்திருத்தம் மூலம் அதிகார மாற்றம் நடைபெறுவதற்கு இந்த குழு உதவும். பிரச்சனைக்கு தீர்வு காண வெளிநாடுகளை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு டிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

தினமலர் 6-02-2011