முதல்வராக பதவியேற்றவுடன் 6 முக்கிய இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றினார் ஜெ.

17/05/2011 11:18

ஜெ நேற்று மாலை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 33 அமைச்சர்களுடன் பதவியேற்றுக் கொண்டார் பதவியேற்றவுடன் 6 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் அதன் விபரம் வருமாறு

1. படித்த பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் ரூபாய் 25000 வழங்கப்பட்டு வருகிறது மேலும் பட்டம் பெற்ற மணப்பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் அத்துடன் அனைத்து மணப்பெண்களுக்கும் 4 கிராம் தங்கம் இலவமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

2. முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை ரூபாய் 500 ல் இருந்து 1000 ரூபாயாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது

 

3. பொது வினியோகத்திட்டததின் கீழ் 20 கிலோ அரிசியும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைவாசிகளுக்கு 35 கிலோ அரிசியும் கிலோ 1 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. இனி இலவசமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

4. மீனவர்கள் வருடத்திற்கு 45 நாள் மீன் பிடிக்கத் தடை உள்ளது. அந்த நாட்களில் 1000 ரூபாய் அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த உதவித்தொகையை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

5. பெண் அரசுப் பணியாளர்களின் மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதமாக உயர்த்தி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

6. மேலும் அரசு திட்டங்களை அமல்படுத்தவும் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் புதிய துறை ஒன்றை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.