தேவிபட்டினத்தில் சுவாமி சிலைகள் - முஸ்லிம் குடும்பம் ஒப்படைப்பு பூஜைகள் அனுமதி

27/08/2010 16:07

தேவிபட்டினத்தில் அப்துல் கரீம் என்பவரது நிலத்தை தூய்மை செய்வதற்காக , இயந்திரம் மூலம் தோண்டும்போது சுவாமி சிலைகள் கிடைத்தன.  தேவிபட்டினத்தை சேர்ந்தவர் அப்துல் கரீம் மனைவி செய்நம்பு. இங்குள்ள இவருக்கு சொந்தமான நிலத்தை தூய்மை செய்வதற்காக , இயந்திரம் மூலம் நேற்று தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்தன. முஸ்லிம் என்பதால், அச்சிலை எந்த தெய்வம் என்பதை அறியமுடியவில்லை.

"அம்மன் சிலை கிடைத்திருப்பதாக,' அப்பகுதி வி.ஏ.ஓ.,க்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அங்கு வந்த வருவாய் துறையினர், கருடாழ்வார் மற்றும் பெருமாள் கற்சிலைகள் என்பதை உறுதி செய்தனர். இரு சிலைகளும் முறையே மூன்று மற்றும் இரண்டரை அடி உயரம் கொண்டிருந்தன. சிலை எடுத்து செல்லும் முன் பூஜை செய்ய வேண்டிய கட்டாயத்தில், முஸ்லிம் குடும்பத்திடம் வருவாய் துறையினர் அனுமதி கேட்டனர். "தாராளமாக செய்து கொள்ளுமாறு ' அனுமதி அளித்தனர்.  இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து, இரு சிலைகளையும் வாகனத்தில் எடுத்து வந்த வருவாய் துறையினர், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் .

அங்குள்ள அதிகாரிகள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் கூறியதாவது:  கிடைத்த சிலைகளை முஸ்லிம் குடும்பத்தினர் முறையாக எங்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இடத்தில் பூஜை செய்யவும் அனுமதித்தனர். முறைப்படி சிலைகள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன, என்றார்.