முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்ட நிகழ்வுகள் 26-7-10

07/08/2010 22:34

கடந்த 26-7-2010 திங்கட்கிழமை அன்று நமதூர் முஸ்லிம் தர்மபரிபாலன சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 7 மாதங்கள் கழித்து இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்திற்க்கு ஜமாஅத் தலைவர் சேகு முஹம்மது, து. த. நூர் முஹம்மது, செயலாலர் ஜகுபர் அலி து.செ. நிஜாமுதீன் மற்றும் பொருளாளர் முஹம்மது சரிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக் கூட்டத்தில் முக்கிய நிகழ்வுகள் வருமாறு..

1. 2010ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து கடந்த 7 மாதங்காளக கூட்டம் நடத்தாமல் இருந்ததற்க்கு சகோ. பி எஸ் ஓ அப்துல் ஹமீது அவர்கள் தனது கண்டனத்தை தெறிவித்தார்கள்.

2. நோன்புக் கஞ்சி சம்மந்தமாக மளிகைப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளதால் அதற்க்கேற்ப்ப நேன்புக் கஞ்சிக்கான கட்டனத்தை உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது.

3. நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்க்கு புறம்போக்கு நிலத்தில் சீமக்கருவை மரங்களை அரசு அனுமதியின்றி ஜமாஅத் நிர்வாகத்தினர் வெட்டியதை தொடர்ந்து ஜமாஅத் மீது தாசில்தார் நடவடிக்கை எடுத்தது சம்மந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டது. இது ஜமாஅத்தின் நிர்வாகத் திறமையின்மையையும், அனுபவம் நிறைந்த பளைய நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதும் தெறியவந்தது. இதனால் ஜமாஅத் பணம் லஞ்சம் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு வழங்கியதற்க்கும் பொதுமக்கள் கண்டனம் தெறிவித்தனர்.

4. பொதுப் பிரச்சனைகள் பேசும் போது சகோ. ஜவஹர் அலி அவர்கள் முன்வரிசைக்கு வந்து கத்துவதும் அவரது கருத்துக்கு யாரும் எதிர் கருத்து தெறிவித்தால் ”வெளியில்வா பேசிக் கொள்ளலாம்” என் அழைப்பதும் ஏதோ கட்சிக் கூட்டங்களின் செயல்போல் இருந்தது. இவர் கடந்த கூட்டத்திலும் இதுபோல் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

5. சகோ. ஜபருல்லா கான் அவர்கள் கூறிய கருத்திற்க்கு அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்ததும் பின் வேறு சிலரின் கருத்திற்க்கு அவர்களின் ஆதரவாளர்கள் கைதட்டியதும் ஜமாஅத்தில் புதிய நடைமுறையாக இருந்தது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய ஜமாஅத் நிர்வாகிகளும் கைதட்டியது வேதனைக்குறிய விஷயமாக இருந்தது.

6. ஜமாஅத் தலைவர் சேகு முஹம்மது அவர்கள் கடந்த 29-5-2010 அன்று மற்றொரு நபருடன் குடித்துவிட்டு தாமரைஊரணியருகில் கீழே விழுந்து கிடந்ததை சாட்சியுடன் நிரூபிப்பதாக சகோ. அஹமது பசீர் அவர்கள் கேட்ட கேள்வியை யாரும் கண்டுகொள்ளாமல் வேறு பிரச்சனைகளுக்கு தாவியது மிகுந்த கண்டனத்திற்ககு உறியதாக அமைந்தது. மேலும் ஜமாஅத் நிர்வாகிகளின் ஒழுக்கம் எப்படி இருக்குமோ? என்ற கேள்வி மக்களிடையே எழும்பியது.

7. தலைவர் சேகு முஹம்மது மற்றும் உறுப்பினர் தவ்பீக் ஆகியோர் கடந்த காலங்களில் குடித்துவிட்டு பள்ளிவாசலில் பிரச்சனை செய்தது, அன்றைய ஜமாஅத் மற்றும் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதை தொடர்ந்து கூட்டப்பட்ட அவரசக் கூட்டத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இனி வரும் காலங்களில் இவர்களுக்கு முஸ்லிம் தர்ம பரிபாலன சபையில் எந்தப் பதவியும் கொடுக்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று அவ்விருவரும் ஜமாஅத்தில் முக்கிய அங்கம்வகித்து வருகின்றனர். இது குறித்து சகோ. முஹம்மது சமி அவர்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜமாஅத் செயலர் சகோ. ஜகுபர் அலி அவர்கள் அத் தீர்மானம் இரத்து செய்யப்பட்டதாக கூறி பளைய தீர்மானத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு அது அடித்து திருத்து மீண்டும் டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்த பக்கங்களை காட்டினார். இச்செயல் ஜமாஅத்தின் முக்கிய ஆவணமான மினிட் நோட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மை மீது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு தேவைக்காக மினிட் நோட்டு திருத்தப்பட்டால் கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்களுக்கு  எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும்.

8. அரபி ஒலியுல்லா பள்ளிகளின் புதிய கல்விக்குழு தேர்ந்தெடுக்கப் பட்டது.

9. தாசின் அரக்கட்டளை சார்பில் ரமளான் மாதத்தில் திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடத்துவது சம்மந்தமாக அதன் பொருப்பாளர் சகோ. முஹம்மது அலி அவர்கள் கொடுத்த மணு ஏற்றுக் கொள்ளப்பட்து. மேலும் சகோ. தாசின் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நற்பணிகளை செய்துவருகிறார் அவருக்கு கூட்டத்தில் பாராட்டு தெறிவிக்கப் பட்டது.