முஸ்லிம் பெண்ணை மொபைல் போனில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த போலீஸ் (?)

15/09/2010 15:00

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குளியலறையில் பெண்ணை மொபைல் போனில் படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த மத்திய பாதுகாப்பு படை போலீஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நசீராபானு(32). கணவர் அப்துல் சலீமிடமிருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு பெண் குழந்தை உள்ளது. இவரது வீட்டில் குடியிருந்த மத்திய பாதுகாப்பு படையில் போலீசாக வேலை பார்த்து வரும், கீழத்தூவலைச் சேர்ந்த நாகராஜ், கடந்த 2008ல் குளியலறையில் நசீராபானு குளித்ததை மொபைல் போன் மூலம் படம் எடுத்தார். இதைக் காட்டி மிரட்டிய நாகராஜ், பலமுறை தகாத முறையில் நடந்தார். இதை அவரது நண்பர்களான பரமக்குடியைச் சேர்ந்த தர்மா மற்றும் சுப்பிரமணியனிடம் கூறினார். இவர்கள் மூவரும் சேர்ந்து , நசீராபானுவை வீடியோ படம் எடுத்து மிரட்டி ஐந்து லட்ச ரூபாய், 18 சவரன் நகையை அபகரித்தனர்.

இந்நிலையில், வீடியோ "சிடி' யை கேட்பதற்காக நாகராஜ் வீட்டிற்கு சென்ற நசீராபானுவிடம், அவரது மனைவி நாகவள்ளி, தந்தை மதியழகன் சேர்ந்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்" சிடி'யை தருவதாகக் கூற, அந்த பணத்தையும் கொடுத்தார். ஆனால், அவர்கள் கொடுத்த" சிடி'டூப்ளிகேட் என தெரிய வர, நசீராபானு, பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் புகார் செய்தார். பெண்ணை மானபங்கப்படுத்தி மிரட்டி பணம் பறித்த நாகராஜ் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Dinamalar