முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் - இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர்

19/08/2010 06:10

முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும். எச்சரிக்கிறார் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

நேற்று 18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு  செய்யப்பட்டிருந்தது.

மேற்படி அந்த விழாவின்போது குறித்த அந்த அமைப்பினால் முதலமைச்சரிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய ஒரு மகஜரும் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரை வாசித்து முடித்தபின்பு முதலமைச்சர் அவர்கள் குறித்த அந்த விழா நடைபெற்ற மண்டபத்தின் மேடைமேல் ஏறி நின்றபடி,“முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்” என உரத்த குரலில் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது அங்கிருந்த அந்த கிராமத்து மக்களுக்கு அதிர்ச்சியாகவும் மிகவும் கவலையாகவும் இருந்தது.

இதற்காகவா நாம் இந்த விழா எடுத்தோம் என தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்.

மேற்படி அந்த மகஜரில் அப்படி என்னதான் இருக்கின்றதென ஆராய்ந்தால். ஆரையம்பதிக்கு மேற்கே உள்ள காங்கேயனோடைக்கும் மாவிலங்கத்துறைக்கும் இடையில் உள்ள தமிழர்களின் காணியில் முஸ்லிம்களுக்கென ஒரு புதிய மாதிரிக் கிராமம் அமைக்கப்பட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி தமிழர்களின் காணியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதில் இருந்தது.

அந்த மகஜரைப்  படித்துப் பார்த்த பிற்பாடே முதலமைச்சர் பிள்ளையான் மேற்கண்டவாறு கூறினார்.

ஆனால் இந்த முயற்சிக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்த்து வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக மண்முனைப்பற்று பிரதேச சபையால் ஒரு உண்ணாவிரத போராட்டமும் அண்மையில் இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் இந்த எச்சரிக்கையினால் அங்குள்ள தமிழர்களும் குறித்த அந்த அமைப்பும் முதலமைச்சர் மீது அதிருப்தி அடைந்துள்ளதுடன் தமிழர்களுக்கெதிராக மறைமுகமாக செயற்பட்ட இவர்கள் தற்போது வெளிப்படையாகவும் செயற்பட துணிந்துவிட்டார்கள் என தமிழ் ஆர்வலர்கள் கவலை அடைகிறார்கள்.