மூன்று மாததிற்குள் இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: ஜி.கே.வாசன்

02/12/2010 21:13

மூன்று மாததிற்குள் இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என, மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை இன்னும் 3 மாதங்களில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்,

தூத்துக்குடியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு முதலிலும், அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு,ம் பயணிகள் கப்பல் விடப்படும்.


இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த பயணிகள் கப்பல் திட்டம் தொடங்க, கப்பல் துறை

அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் கையெழுத்தாகும்.

தூத்துக்குடி கொழும்பு இடையே 10 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் செல்ல முடியும். விமானக் கட்டணத்தை ஒப்பிடும்போது, கப்பல் கட்டணம் குறைவாகவே இருக்கும்.

இந்தியா இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் என்றார். nakkeeran.in