யார் இந்த அன்னா ஹஸாரே?

15/04/2011 12:16

 

 

அபு அஸ்பா - புதுவலசை

 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக எல்லா ஊடகங்களும் தொடர்ச்சியாக உச்சரிக்கும் சொல் அன்னா ஹஸாரி. ஊழலுக்கு எதிராக 1991 ல் ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்திவருபவர். இவரது இயற்பெயர் பிஷன் பாபுராவ் ஹஸாரே, ஜனவரி 15, 1940ல் பிறந்தவர், தமது இளம் வயதில் பல கஷ்டங்களைக் கடந்து மும்பைக்கு வந்து சொந்தமாக ஒரு பூக்கடை வைத்து நடத்திவந்தார். பின் 1963ல் இந்திய இராணுவத்தில் வாகன ஓட்டியாக தனது பயனத்தை துவங்கினார். ஓய்வான நேரங்களில் பல தலைவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமுள்ளவர். 1965 இந்தியா பாகிஸ்தான் போரில் இரணுவ டேங்கி ஓட்டியாக பணியாற்றி அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தவர்.

பின் 1975ல் இரணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று மஹாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ரிலேகான் சித்தி கிராமத்திற்கு வந்தார். அங்கு இருந்த மது வியாபாரம் மற்றும் மதுவால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து களம் இறங்கினார். அதன் விளைவாக மகாராஷ்ட்ரா அரசு ஒரு சட்டத்தை இயற்றியது, ஒரு ஊராட்சியில் இருச்கும் 25 சதவீத பெண்கள் மதுவுக்கு எதிராக எழுத்து மூலம் தடைகோரினால் அந்த பகுதியல் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்படும் என்பதுதான் அந்த சட்டம். பின் தொடர்ந்து அந்த கிராம முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சி செய்ததின் விளைவாக 1992ல் அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கொளரவித்தது.

மேலும் இவர் தீண்டாமைக்கு எதிராகவும், கலப்புத் திருமணம் மற்றும் கிராம சபை சட்டத்தில் தேவையான மாற்றம் உள்ளிட்டவைகளில் இவருக்கு கிடைத்த வெற்றிகள் குறிப்பிடத்தக்கது.