ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலக ஊழியர்கள் “ஸ்டிரைக்”

01/12/2010 17:02

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களின் ஊழியர்கள் இன்று 2-வது நாளாக “ஸ்டிரைக்”கில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பாலசுப்பிரமணியன் இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக மேலாளர் (சிரஸ்தார்) விஜயராஜ் தனது பணி தொடர்பான ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பித்தார்.

 

 

 

 

அப்போது அவரை வருவாய் அலுவலர் திட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விஜயராஜ் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் நாகநாதன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று “திடீர்” வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து இன்று 2-வது நாளாகவும் 7 தாலுகா அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன.

இதனால் தாலுகா அலு வலக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார் கள். எனவே மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஊழியர்கள் மோதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். maalaimalar.com