ரேசன்கடை அவலங்கள் - சிறப்பு செய்தி

20/10/2010 15:17

நமது ஊர் ரேஷன் கடையில் பொருள்கள் விற்கும்போது எல்லா வார்டுகளுக்கும் ஒன்றாக வழங்கும் நிலைமை தற்போது உள்ளது.இதனால் மக்கள் வரிசையில்நிற்கக்கூட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பல பொருட்களை சேர்த்துவழங்கும் நிலையையும் காண முடிகிறது.உதாரணமாக, கோதுமை,பருப்பு,அரிசி எனஇத்தனையும் ஒரே நாளில் வழங்கும்போது கூட்டம் அதிகமாகிறது. கடையை எல்லாநாட்களும் திறந்து வைப்பதுமில்லை. இந்த நிலையை மாற்றி, வார்டு வாரியாகபொருட்கள் விற்கப்பட்டால் மக்களுக்கு இலகுவாக இருக்கும். நேரமும்மிச்சமாகும். மற்றும், இன்று இந்த பொருள் இந்த வார்டுக்கு வழங்கப்படும் என்றுபொதுமக்களுக்கு நமது ஊர் பள்ளிவாசல் ஒலிபெருக்கியின் மூலம்தெரியப்படுத்தி விட வேண்டும் என்கிற எனது கோரிக்கையை இதன்மூலம்தெரியப்படுத்தி கொள்கின்றேன்.

நமதூர் நலம் விரும்பி மூலம் இன்று ஒரு தகவல் ”ரேசன்கடை”. அது சம்மந்தமான பணிகள் முடிக்கி விடப்பட்டு இருந்தாலும். அது சம்மந்தமான இன்னும் சில செய்திகளை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நமதூ ரேசன் கடையில் பணியாற்றி வந்த ரவி என்பவர் மீது ரேசன் பொருள் கடத்தல் மற்றும் முறையற்ற விணியோகம் தொடர்பாக தாசில்தாரிடம் புகார் தெறிவிக்கப்பட்டது. (இந்த புகார் கூட விளையாட்டாக கொடுக்கப்பட்டதேயாகும்). அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு. புதிதாக ஒருவரை நியமித்தனர்.

பின் புதிதாக நியமிக்கப் பட்டவர் சீனி விணியோகத்திற்க்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதாக மற்றொறு புகார் கொடுக்கப்பட்டு தாசில்தார் நேரடி விசாரனை நடத்தி பின் சரிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தினமும் வாரம் 5 நாட்கள் ரேசன்கடை திறந்தே இருந்தது யார் வேண்டுமானாலும் எப்பவும் எதையும் வாங்கிக் கொள்ள முடியும் என்ற நிலை சிலகாலம் நீடித்தது. அதுதான் சட்டப்படியானதும் கூட.

ஆனால் இந்த நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களுக்கும், அரசு ஊழியர்களின் வரம்பு மீரலுக்கும் நம்மக்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கமுடியாது. காரணம் யார் எல்லாம் சப்தம் போடுகிறார்களோ அவர்களை எல்லாம் ரேசன்கடை ஊழியர்கள் தாஜாபண்ணி 2 கிலோ சீனிக்கு 5 கிலோ கொடுத்து விடுகின்றனர். உடனே நமக்கு நல்லவனா நடந்து கொள்கிறானே என்ற சுயநலம் இதுபோன்ற பிரச்சனைக்கு ஒரு காரணம்.

அதே போல் சாவகாசமாக ரேசன்கடைக்கு செல்வார்கள் அங்கு நூற்றுக் கணக்கானோர் காத்துக் கிடப்பார்கள், அவர்கள் அனைவரும் ஆண்துணையில்லாத பெண்களாக இருப்பார்கள். அங்கு செல்லும் ஜமாஅத் முக்கியஸ்தரர்களுக்கும், ஊராட்சி மன்றத்தினாரகட்டும், முன்னால் நிர்வாகிகளாக இருக்கட்டும் அல்லது சில வெத்து வேட்டுகள் ஊருக்குள் பெரியமனுசன் போல நடமாடுபவர்களாகட்டும் அவர்களுக்கு அந்த ஊழியர் முக்கியத்துவம் தந்து நிற்க விடாமல் அனுப்பி விடுகிறார். (இதில் யாரையும் புண்படுத்துவது நம் நோக்கமல்ல, மாறாக மக்கள் பயண்பெற வேண்டும்). இவர்களில் யாராவது அங்கு நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்பார்களா? கேட்க மாட்டார்கள்.

அது மட்டுமில்லாமல் ரேசன் கடை கண்காணிப்புக் குழு ஒன்றும் நமதூரில் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றம் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட 4 பேர் அக்குழுவில் உள்ளனர். பிரச்சனை சம்மந்தமாக அவர்களை அணுகுமாறு ரேசன் கடை வாசலிலேயே எடுதப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. (மக்கள் அவர்களை நம்ப வில்லையே என்னவோ?) ஆனாலும் பிரச்சனைகள் வந்தவண்ணம் தான் உள்ளது.

பொதுவாக ரேசன் கடைக்கு வரும் பொருட்கள் 10 முதல் 15 சதவீதம் குறைவாக வருவதாக தகவல் உள்ளது. அந்த தகவலில் உண்மை இருந்தாலும் சில சுயநல நோக்கர்களை ஊழியர்கள் கவனிக்கின்ற காரணத்தால் 2 நாட்கள் கூட சீனி இருப்பது இல்லை. தாமதித்தால் சினி கிடைக்காதே என்ற எண்ணத்தில் மக்கள் அலைமோதத் தொடங்கி விடுகின்றனர்.

இந்த பிரச்சனைக்குப் பிறகாவது அது பொன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்குமா? (அது கிடக்குது பூனைக்கு மணி கட்டுபவர்களை சமூகம் குற்றவாளிகளாக பார்க்காமல் இருந்தால் சரி......)