வங்கக் கடலில் புயல் சின்னம் பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

16/10/2010 13:56

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால், பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

Dinamani

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிழக்கு திசையில் 550 கி.மீ. தொலைவில் காற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், ஒரிசா மாநிலம் கோபால்பூர், பாரதீப் கடற்கரைக்கு இடையே உள்ள பூரி எனும் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை கரை கடக்க இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்ததாக பாம்பன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து, தொலை தூர எச்சரிக்கையாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

இந்த எச்சரிக்கையால் ராமேசுவரம் தீவு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத் துறையினர் வலியுறுத்தினர்.