‌க‌‌ர்‌ப்‌பி‌ணி பெண் ஜெமீலா பீவி மரண‌ம்: அரசு மரு‌த்துவ‌ர்க‌ள் ‌மீது கருணா‌நி‌தி நடவடி‌க்கை

29/09/2010 16:00
நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் ஜமீலா பீவியினமூன்று வயது மகன் பராமரிப்புச் செலவுக்காக 2 இலட்சம் ரூபா‌ய் நிதியுதவி வழ‌ங்‌கியு‌ள்ள முதலமைச்சர் கருணா‌நி‌தி, ஜமீலா பீவிக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிப்பதில் கவனக் குறைவாகச் செயல்பட்ட மருத்துவர்கள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த எம்.சுபஹானி என்பவரது மனைவி ஜமீலா பீவி என்பவர், பிரசவத்திற்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் 23.6.2010 அன்று உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கவனக் குறைவாகச் செயல்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

உயிரிழந்த ஜமீலா பீவியின் கணவர் சுபஹாணி ஓட்டலில் கூலித் தொழிலாளராக வேலை செ‌ய்வதையும், அவருடைய குடும்பத்தின் வறிய நிலையையும் கருதி, அவருடைய மூன்று வயது மகன் ரியாஸ்கானுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாடீநு நிதியுதவி வழங்கிடவும்;

இந்தத் தொகையை சிறுவன் ரியாஸ்கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் பெயரில் கூட்டாக நிரந்தர வைப்பீடு செ‌ய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைச் சிறுவனின் பராமரிப்பிற்காக, அவனுக்கு 18 வயது நிறைவடையும் வரை, அவனது தந்தை சுபஹாணிக்கு வழங்கிட, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுரைகள் வழங்கியும் முதலமைச்சர் கருண‌ா‌நி‌தி ஆணையிட்டுள்ளார்.

உயிரிழந்த ஜமீலா பீவிக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிப்பதில் கவனக் குறைவாகச் செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது உரிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எ‌ன்று தம‌ிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Webdunia