‌வி‌க்‌கி‌லீ‌‌க்‌ஸ் இணையதள‌த்தை முட‌க்க அமெ‌ரி‌‌க்கா ‌தீ‌விர‌ம்!

04/12/2010 12:20

அமெ‌ரி‌க்க அயலுறவு‌த்துறை ரக‌சிய‌ங்களை அ‌ம்பல‌ப்படு‌த்‌திய ‌வி‌க்‌கி‌லீ‌‌க்‌ஸ் இணையதள‌த்தை முட‌க்கு‌ம் நடவடி‌க்கை‌யி‌ல் அ‌ந்நா‌ட்டு உளவு‌த்துறை அமை‌ப்புக‌ள் ‌தீ‌விரமாக ஈடுப‌ட்டு‌ள்ளன.

வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் இணையதள‌ம் அமெ‌‌ரி‌க்க ச‌ர்வ‌ர் மூல‌ம் இய‌க்க‌ப்படுவது தடு‌த்து ‌நிறு‌த்த‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் சு‌வீட‌னி‌ல் இரு‌ந்து ச‌ர்வரை பெ‌ற்று அ‌ந்த இணையதள‌த்‌‌தி‌ன் உ‌ரிமையா‌ளர் ஜூலியன் அசாஞ்சே தொட‌ர்‌ந்து செ‌ய்‌திகளை வழ‌ங்‌கி வ‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் நே‌ற்று முத‌ல் சு‌வீட‌ன் ச‌ர்வரு‌ம் அம‌ெ‌ரி‌க்க உளவு‌த்துறை அ‌திகா‌ரிகளா‌ல் செய‌‌லிழ‌க்க செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் சு‌வி‌ட்ச‌ர்‌லா‌ந்து நா‌ட்டி‌ன் ச‌ர்வரை பெ‌ற்று ‌வி‌க்‌கி‌லீ‌ஸ் இணைய‌தள‌த்தை செய‌ல்பா‌ட்டு‌க்கு கொ‌ண்டு வரு‌ம் நடவடி‌க்கை‌யி‌ல் அசாஞ்சே ‌தீ‌விர‌ம் கா‌ட்டி வரு‌கிறா‌ர்.

இத‌னிடையே அசாஞ்சே ‌மீது ஏ‌ற்கனவே இரு‌க்கு‌ம் பா‌லிய‌ல் கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ன் அ‌டி‌ப்படை‌யி‌ல் அவரை கைது செ‌ய்யு‌ம் நடவடி‌க்கை‌யிலு‌ம் அமெ‌ரி‌க்கா ஈடுப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் அசாஞ்சே ஒ‌வ்வொரு நாடாக அடை‌க்கல‌ம் கோ‌ரி த‌ப்‌பி வரு‌கிறா‌ர். webdunia.com