12 மணி நேரத்தில் திருக்குர்ஆனை ஒப்பித்து சிறுவன் சாதனை

09/07/2012 09:42

மும்பை - 12 வயதுச் சிறுவன் ஒருவன், 12 மணி நேரத்தில் புனித நூலான திருகுர்ஆனை மனனமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளான்.


மராட்டியத்தில் உள்ள அகமத் நகர் என்ற இடத்தைச் சார்ந்த சிறுவன் முஹம்மத் ஜபியுல்லா. வயது 12. முஹம்மத் ஜபியுல்லா புனித நூலான திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ளான். திருகுர்ஆன் ஏறத்தாழ 6000 வசனங்களைக் கொண்டதாகும்.

ஜபியுல்லா 07.07.2012 அன்று குர்ஆனை மனனமாக ஒப்புவித்தான். காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு குர்ஆனை முழுவதுமாக ஒப்புவித்து முடித்தான். இந்தச் சிறுவன் தாருல் உலூம் தாஜூல் மஸ்ஜித் பள்ளியில் பயின்று வருகிறான்.

சிறுவன் ஜபியுல்லா கூறுகையில், குர்ஆனை மனப்பாடமாக்க 8 மாதங்கள் ஆனதாக தெரிவித்தான். சிறுவனின் இந்தச் சாதனையை பாராட்டி ஏராளமான மக்கள் அவனுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.


Read more about 12 மணி நேரத்தில் குர்ஆனை ஒப்புவித்து சாதனை படைத்த சிறுவன் [5203] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com