15 வயது சிறுவனுக்கு செயற்க்கை இதயம் மருத்துவர்கள் சாதனை

05/10/2010 15:52

லண்டன், அக்.3: உலகிலேயே முதல் முறையாக பதினைந்து வயது சிறுவன் ஒருவனுக்கு செயற்கை இருதயம் பொருத்தி மருத்துவ சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகள் இயல்பான வாழ்க்கை வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ள அந்த சிறுவன் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோதிலும் நலமாக இருக்கிறான்.

 

இது பற்றிய விவரம்:

 

இத்தாலியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத சிறுவனுக்கு ரோம் நகரில் உள்ள பாம்பினோ செசு குழந்தைகள் மருத்துவமனையில்  கடந்த வாரம் 10 மணி நேரம் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நிரந்தர செயற்கை இருதயம் பொருத்தப்பட்டது. இந்த அறுவைச்சிகிச்சையை டாக்டர்.அண்டோனியோ அமோடியோ  வெற்றிகரமாக செய்துமுடித்தார்.

 

இந்த நிரந்தர செயற்கை இருதயம் எளிதில் நோய்த்தொற்று ஏற்படாதவாறு இடது இருதயப் பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ளது. இதை இயக்கும் சுவிட் அச்சிறுவனின் இடது காதின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் பேட்டரி  தனியே பெல்ட்டில் வைக்கப்பட்டு இருக்கும். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல இந்த பேட்டரியை இரவு நேரத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளவேண்டும். சுவிட்சை போட்டதும் மின்சாரம் பாய்ந்து இந்த நிரந்தர செயற்கை இருதயம் இயக்கி ரத்தத்தை பம்ப் செய்யத்துவங்கும். இக்கருவியின் எடை 3 அவுன்ஸ்தான்.(வயதானவர்களுக்கு பொருத்தப்படும் நிரந்தர இருதயத்தின் எடை 2 பவுண்ட்).

 

தாற்காலிக செயற்கை இருதயத்தை சிறுவர்களுக்கு பொருத்துவது சகஜமாகிவிட்டபோதிலும் நிரந்தர செயற்கை இருதயத்தை சிறுவனுக்குப் பொருத்தியது இதுவே முதல் முறை.

 

இச்சிறுவனுக்கு மாற்று இருதயம் பொருத்தமுடியாதநிலை ஏற்பட்டதால் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டது,

 

அறுவைச்சிகிச்சை முடிந்துவிட்டபோதிலும் இன்னும் தீவிரசிகிச்சைப் பகுதியில்தான் இச்சிறுவனை வைத்திருக்கின்றனர். இச்சிறுவன் அறுவைச் சிகிச்சை முடிவடைந்த பின் தூங்கிவிழித்ததுபோல சாதாரணமாக கண்விழித்தான். இவனது தாய்ó கூப்பிட்டபோது பல்தேய்த்துக்கொண்டிருந்ததால் அப்போது அவருடன் பேசமுடியவில்லை. ஆனால், இப்போது மருத்துவர்களிடம் நன்கு பேசுகிறான்.

 

கடந்த ஆண்டு 13 வயதான ஆண்ட்ரூ ஆம்ஸ் என்ற சிறுவனுக்கு தாற்காலிக செயற்கைó இருதய வால்வு பொருத்தப்பட்டது. அது அவனது மற்ற இருதய பாகங்களுடன் நன்கு இயங்கியது. அப்போது அது பெரிதாக பேசப்பட்டது. ஆனால், அதன் பின்

 

தாற்காலிக செயற்கை இருதயம் பொருத்தப்படுவது சாதாரணமாகிவிட்டது. இப்போது நிரந்தர செயற்கை இருதயம் ஒரு சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது மருத்துவ உலகில் சாதனையாகக் கருதப்படுகிறது.