17 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 10 பெண்கள்

23/11/2010 13:49

ஆஸ்திரேலியாவில் 17-வயது பள்ளி மாணவனை கத்திமுனையில் 10 பெண்கள் பாலியல் பலாத்காரம்  சிட்னியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‌இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் ஏ.ஏ.பி. எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலியாவின் தெற்கு ஹைலட்ஸ் மாகாணத்தில்  கடந்த  வாரம் பள்ளி சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை 10 பெண்கள் திடீரென வழிமறித்தனர். சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை காட்டி மிரட்டினர் இதில் 4 பெண்கள் அந்த சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தனர்.   இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  சிறுவனிடம் பாலத்காரம் செய்த பெண்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடான பாப்புவா நியூகினியா நாட்டினைச் சேர்ந்தவர்கள். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு ஏதேனும் எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாதிப்பு வந்துவிடும் என அஞ்சுவதாகவும், தன்னை பாலத்காரம் செய்த பெண்களுக்கு ஏதேனும் எச்.ஐ.வி. உள்ளனவா என சோதனை செய்யும்படியும் கூறியுள்ளான். 

ஐ.நா. அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகின் அதிகம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள நாடு பாப்புவா நியூ கினியா தான் என கூறப்படுகிறது.  அதனாலேயே அந்த சிறுவன் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு வந்துவிடுமோ என பீதியில் உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
dinamalar.com