+2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று அசத்திய நமதூர் மாணவிகள்

11/05/2011 23:22

கடந்த 9 ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது அதில் பெரும்பாலும் மாணவிகளே அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தனர். நமதூரில் இருந்து 11 மாணவிகளும் 12 மாணவர்களும் இந்த வருடம் +2 தேர்வு எழுதியிருந்தனர். அதில் இருவர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தனர் 1 மாணவி 1102 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

1.   நமதூர் சகோ. சீனி அபுதாஹிர் அவர்களின் மகள் ஹபீபா ஜெஸ்மின் 1102 (T – 187, E – 171, P – 196, C – 173, B – 178, M – 197) மதிப்பெண்கள்.

2.   சகோ. தஹ்னியத் அலி அவர்களின் மகள் நயீமா 1088 (T – 194, E – 167, P – 189, C – 164, B – 176, M – 198)

3.   ஆசிரியை சயிதா ராணி அவர்களின் மகள் அப்ரின் ஹஸ்னா 1029 (T – 188, E – 162, P – 174, C – 158, B – 177, M – 170)

இந்த மூன்று மாணவிகளும் இராமநாதபுரம் செய்யதம்மாள் மேநிலைப்பள்ளியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 1 மாணவனும் 1 மாணவியும் இந்தத் தேர்வில் தவறியுள்ளனர் அவர்கள் இருவரும் பனைக்குளம் பகுர்தீன் அரசு மேநிலைப்பள்ளியில் பயின்றவர்கள் ஆவர். நமதூர் மாணவ மாணவிகளின் சாதனைகள் தொடர புதுவலசை ஜமாஅத் (புதுவலசை.இன்) இணையளம் சார்பாக வாழ்த்துக்களை தெறிவித்துக் கொள்கிறோம்.