26ஆம் நாள் ரமளான் சிலருக்கு புதுவலசை மாரியம்மன் கோவிலில் - எங்கே போகிறது நம் சமுதாயம்???

16/08/2012 10:23

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டும் கட்டுப்படுங்கள் வேறு யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதீர்கள் என்ற ஏகத்துவ நாமத்தை தமிழகம் முழுவதும் உரத்தர குரலில் பிரச்சாரம் செய்து வருகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். மக்களை அறியாமை என்ற இருளில் இருந்து ஒளிமயமான தூய இஸ்லாத்தின்பால் அழைக்கும் இந்தக் கூட்டத்திற்கு எதிராக சுயநல தலைவர்களும், சிந்திக்க மறுக்கும் கூட்டமும் சேர்ந்து மக்களை திசைதிருப்பி வருகின்றனர். அவர்களின் முதல் உபதேசம் நஜாத் காரன் சொல்வதை கேட்காதே என்பதுதான், பிஜே பேச்சை கேட்காதே என்பதுதான். (கேட்டால் சத்தியத்தை அறிந்துகொள்வர்கள் என்ற பயம்(?))

 

எந்த ஒரு நடுநிலையான சிந்தனையுள்ளவனும், எந்த ஒரு அறிவுள்ளவனும் ஒரு முடிவு செய்யும் முன் அந்த முடிவுக்கான காரண காரியங்களை விளங்கித்தான் முடிவு செய்வான். ஆனால் இந்த தவ்ஹீத் எதிர்ப்பாளர்களுக்கு எந்த முகாந்திரமும் இருந்ததில்லை. ஒருவன் உலகில் ஒரு விசயத்தை சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளும் முன் அவன் எப்படிப்பட்டவன் அவனுடைய அந்த உபதேசம் சரியா அது நமக்கு நன்மையளிக்குமா என்றெல்லாம் பார்க்கிறான் ஆனால் இஸ்லாத்தையும் மறுமைக்கான வழியையும் யாராவது சொன்னால் முன்னோர்கள், ஊரோடு ஒத்துப் போவது, இமாம்கள் என்று சாக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறான். ஆனால் அதுவே அவனது சொந்த உலக வாழ்க்கையை பாதித்தல் ஊராவாது ஜமாஅத்தாவது என்று முடிவெடுப்பதைப் பார்க்கிறோம்.

 

இவர்களின் சுயநலனாலும், அறியாமையாலும், போட்டி மனப்பான்மையாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே அதிலும் குறிப்பாக பெண்கள்.

 

கிட்டத்தட்ட நமதூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏகத்துவத்தை ஒரு சிரிய குழு சொல்லிக்கொண்டு இருக்கிறது. இதுவரை அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று தெறியாமலேய எதிர்ப்பவர்கள்தான் அதிகமே தவிர. என்னதான் சொல்கிறார்கள் அவர்கள் சொல்வது சரியா என்ற கோணத்தில் பெரும்பாலானோர் சிந்தித்ததாகவே தெறியவில்லை. அல்லது இமாமத் செய்வதற்கானவும் மதரஸாவில் ஓதிக்கொடுக்கவும் இருக்கும் நமதூர் ஆலிம்களின் தெளிவற்று உபதேசங்களை நம்பி நம் மறுமை வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கும் மக்களுக்கும் அதற்குப் பொறுப்பாளர்களாக இருக்கு அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுக்கும், ஆலீம்களுக்கும், மற்ற இயக்கவாதிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கும் இந்த அவலம் முன்வைக்கப்படுகிறது.

 

அல்லாஹ் தன் திருமறையில் ...

51.56. ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

அல்லாஹ்வை வணங்குவது மட்டும்தான் ஒரு முஸ்லீமின் தலையாய கடமை.

3.102. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

மேலும் அல்லாஹ் கட்டளை இடுகிறான்...

66.6. நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

தம் குடும்பத்தாரை நரகை விட்டுப் பாதுகாப்பது ஒவ்வொறு முஸ்லீம் மீதும் கடமை.

யார் ஒருவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கிறாரோ அவரது பாவங்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் அவருக்கு நிரந்தர நரகம்.

4.116. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

சமுதாய தலைவர்களும், ஜமாஅத்துக்களும் இணைவைப்புக் காரியங்களை மற்ற இயக்கவாதிகளின் மறைவான உதவியுடன் (யார் தவறை தடுக்கவில்லையோ அவர்களுக்கும் குற்றத்தில் பங்குண்டு பார்க்க  குறிப்பு1) அறங்கேற்றி வந்தால் மக்கள் எப்படி அதிலிருந்து விளகிக்கொள்வார்கள்?

 

இணைவைப்பு என்றால் என்னவென்றே தெரியாத மார்க்க அறிஞர்களும், தலைவர்களும் இருக்கும்போது ஒருவர் அதை தவறு என்று சொன்னால் அவர்களுக்கும் ஜமாஅத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என ஒதுக்குவார்கள். இதைத்தான் கற்று வைத்துக்ளார்கள் ஒரு சாதரண அறிவு உள்ளவன் கூட தவறு என்று விளங்கிவைத்துள்ள தர்ஹா வழிபாடுகளையும், மௌலீது பாடல்களையும் இவர்கள் தலைமை தாங்கி நட்துவதிலிருந்தே அவர்களுக்கு எந்த அளவுக்கு இஸ்லாத்தை பற்றிய ஞானமும், இணைவைப்பு பற்றிய தெளிவும், அல்லாஹ்வை பற்றிய அச்சமும் இருக்கிறது என்று யாராலும் விளங்கிக் கொள்ள முடியும் (என்ன இவர்களுக்குத்தான் எல்லாம் தெறியும் என போசுவதாக நினைக்கிறீர்களா? ஆம் என்றே வைத்துக் கொள்ளுங்கள் அதுவல்ல இப்ப பிரச்சனை) தயவு செய்து இணைவைப்பு விசயத்தில் மற்ற எல்லா பிரச்சனையும் விட கவனம் செலுத்துங்கள் அது நம் அனைத்து நல்லறங்களையும் அழித்துவிடும். நம் சமூகத்தை நரகிற்கு கொண்டு சென்றுவிடும்.

39.65, 66. 'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

மக்கா காபிர்களை பற்றி அல்லாஹ் திருமறைக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டுகிறான். அதில் அவர்கள் அல்லாஹ்வையும நம்பி இருந்தார்கள் மற்ற சிலவற்றையும் தெய்வங்களாக நம்பினார்கள். அல்லாஹ்வை முற்றிலும் மறுத்த கூட்டம் இல்லை எனவும், மற்ற தெய்வங்களுக்கு அவர்கள் நேர்ச்சை செய்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், அவைகளிடத்தில் உதவி தேடினார்கன் எனவே தான் அவர்கள் முஷ்ரிக்கள் மற்றும் காபிர்கள் என்று கூறுகிறான். (விரிவாகப் பார்க்க ஏகத்துவம் என்றால் என்ன? பாகம் 1 , பாகம் 2)

 

நேர்ச்சை செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும், பிரார்த்தனை மற்றும் உதவி தேடுவது அல்லாஹ் ஒருவனித்தில் மட்டுமே கேட்கவேண்டும். இதை யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடம் கேட்கிறார்களோ அல்லது அவர்களுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவர்களும் மக்கா காபிர்களின் செயல்களுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை தயவு செய்து உங்கள் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். (மேலதிகமான அறிந்துகொள்ள சத்தியத்தின் இன்றைய நிலை என்ற வீடியேவை பார்க்க.)

 

அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அல்லாஹ்வுடைய அச்சத்தை தேடிக்கொள்ளுவும் அல்லாஹ்வுடைய கருணையைப் பெறவும் ஏற்ற இந்த ரமளான் மாதத்தில் நமதூர் மக்கள் புதுவலசை நாடார் தெருவில் இருக்கும் கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார்கள் சகோதரர்களே! தயவு செய்து இதை ஏதே ஒரு ஏகத்துவவாதியின் வளமையான குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளாமல் மக்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்லுங்கள் இல்லையானால் எங்களையாவது சொல்லவிடுங்கள் அதிலிருந்து மக்களை தடுக்காதீர்கள். இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் ஊட்டுங்கள். இணைவைத்தலைலும் புதிய நடவடிக்கைகளையும் அடியோடு ஒழித்துக் கட்டுங்கள். அல்லாஹ் நம் பாவங்களை மண்ணிக்கப் போதுமானவன், பார்க்க குறிப்பு 2.

 

புதுவலசையை சேர்ந்த அனைத்து இயக்கத்தினருக்கும், ஜமாஅத்துக்கும், ஆலீம்களுக்கும் மற்ற நடுநிலை (?)யாளர்களுக்கும் இவர்களின் செயல்களில் நிச்சமாக பங்கு இருக்கிறது. நீங்களும் பொறுப்பாளிகள் உங்கள் பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். சத்தியத்தை எடுத்துச. சொல்லுங்கள் நரகில் இருந்து நம் குடும்பத்தாரை காத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

 

குறிப்பு 1

7:163 கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.


7:164  ''அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் ''உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.


7:165 கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.
 

7:166  தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது ''இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.

குறிப்பு 2

61.12. உங்களுக்காக உங்கள் பாவங்களை அவன் மன்னிப்பான். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அதன் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய குடியிருப்பு களும் உள்ளன. இதுவே மகத்தான வெற்றி.


2.284. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.


5.18. ''நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளை களும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறு கின்றனர். ''(அவ்வாறாயின்) உங்கள் பாவங் களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?'' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.


3.31. ''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!


8.70. ''உங்கள் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால்194 உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப் பட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு அவன் வழங்குவான். உங்களை மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று நபியே உம்மிடம் உள்ள கைதிகளிடம் கூறுவீராக!


33.24. உண்மையாளர்களுக்கு அவர்களது உண்மையின் காரணமாக அல்லாஹ் பரிசளிப்பான். நாடினால் நயவஞ்சகர்களைத் தண்டிப்பான். அல்லது அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவ னாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.


5.40. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.


33.71. அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.


71.2, 3, 4. "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?'' என்று அவர் கூறினார்.26


39.53. தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!


12.92. 'இன்று உங்களைப் பழிவாங்குதல் இல்லை. உங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் சிறந்த கருணையாளன்' என்று அவர் கூறினார்.ானார்கள்.


4.116. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.


5.39. அநீதி இழைத்த பின் மன்னிப்புக் கேட்டு (தம்மை) திருத்திக் கொண்டவரை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.


4.17. அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.


57.28. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனது தூதரை நம்புங்கள். அவன் தனது அருளில் இரு மடங்கை உங்களுக்கு வழங்குவான். உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். அதன் மூலம் (நல்வழியில்) நடப்பீர்கள். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.


4.48. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.