6400 தனியார் பள்ளிகளுக்கு 3 மாதத்தில் புதிய கட்டணம் நிர்ணயம்

01/11/2010 12:40

 

தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது. கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது எனமேல் முறையீடு செய்தன. 6,400 தனியார் பள்ளிகள் கமிட்டியிடம் முறையீட்டு மனுக்களை அளித்தன.

இதற்கிடையில் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. 4 மாதத்தில் 6,400 தனியார் பள்ளிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பள்ளிகள் சார்பில் சமர்பிக்கப்படும் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் கமிட்டி தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ரவி ராஜபாண்டியனை அரசு நியமித்தது.
 
புதிய தலைவராக அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகம் பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டிடத்தில் உள்ள கமிட்டி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
 
அவருக்கு உயர் கல்வி துறை செயலாளர் கணேசன், அனைவருக்கும் திட்ட இயக்குனர் வெங்கடேசன், பள்ளி கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, இணை இயக்குனர்கள் தர்மராஜேந் திரன், ராமேஸ்வர முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 
பின்னர் நீதிபதி ரவிராஜபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

 
’’ ஐகோர்ட்டு உத்தரவின்படி 6,400 பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.

nakkheeran.in