அசாமில் பதற்றம் தணிகிறது: நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் வீடு திரும்ப தொடங்கினர்

01/08/2012 21:40
அசாமில் பதற்றம் தணிகிறது: நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் வீடு திரும்ப தொடங்கினர்
 
கவுகாத்தி, ஆக. 1-

அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியினருக்கும், சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிடையே ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக மாறி மாநிலத்தின் அமைதியை சீர்குலைத்தது. இந்த கலவரத்தல் 56 பேர் உயிரிழந்தனர். 

பல லட்சம் மக்கள் உயிருக்குப் பயந்து அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரத்தை ஒடுக்க மாநில போலீசாடன், ராணுவமும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. 

இந்நிலையில் கலவரம் நடைபெற்ற போடோலேண்ட் மற்றும் துப்ரி மாவட்டங்களில் தற்போது நிலைமை ஓரளவு சரீடைந்துள்ளதால், நிவாரண முகாம்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்லத் தொடங்கினர். ஆகஸ்ட் 15ம்தேதிக்குள் முகாம்களில் உள்ள அனைவரும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் தருண் கோகாய் தெரிவித்தார். 

இருப்பினும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து அணிவகுப்பு நடத்தி வருகிறது. இதுதவிர காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 65 கம்பெனி மத்திய படை அசாமில் முகாமிட்டுள்ளது.
மாலைமலர்