இந்தியா-பாக். இடையேயான புதிய விசா நடைமுறை என்ன சொல்கிறது?

10/09/2012 01:00

 

இஸ்லாமாபாத், இந்தியா- பாகிஸ்தான்இடையேயான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

புதிய விசா நடைமுறைப்படி, ஒரு தனிநபருக்கான விசா காலம் 3 மாதம் என்பது 6 மாதமாக நீட்டிக்கப்படும். இதேபோல் 3 இடங்களுக்கு செல்லலாம் என்பது 5 இடங்களாக மாற்றப்படுகிறது.

இந்தியாவில் உள்ள முதியவர்கள், உறவினர்களை பார்க்க வரும் மக்களுக்கு இந்த விசாநடைமுறையால் நல்ல பயன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.

Oneindiatamil