இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 34,580 கோடி டாலர்

02/07/2012 09:10

2011- 12-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்து 30,590 கோடி டாலரிலிருந்து 34,580 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு கடனில் நிறுவனங்கள் திரட்டும் வணிக கடன்கள், குறுகிய கால வர்த்தக கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் மேற்கொள்ளும் டெபாசிட், மத்திய அரசு திரட்டும் கடன் போன்றவை அடங்கும்.
கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சுமார் 18 லட்சம் கோடியாக இருந்த கடன் தொகை, நடப்பாண்டில் 13 சதவிகிதம் உயர்ந்து 20 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய அரசு பின்பற்றும் நவதாராளவாதக் கொள்கை தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையே இந்தக் கடன் அதிகரிப்புக் சுட்டுக்காட்டுகிறது. ரூபாய் வீழ்ச்சி, கடன் அதிகரிப்பு என்பன இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரும்நெருக்கடியை நோக்கிச் செல்வதை அறிவிக்கின்றது.

https://inioru.com/?p=28934