குழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம் - ஆய்வு முடிவு

09/04/2012 11:18

 

குழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று  நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, மழலையரிடமிருந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை மாற்றுவதனால் பள்ளிக்கு வரத்தொடங்கும் வயதிலேயே அதிபருமன் உடலுள்ளவர்களாக அவர்கள் ஆவதைத் தடுக்க முடியும். மழலையர் பள்ளிகளுக்கும் இதில் பங்குண்டு என்று ஆய்வில் ஈடுபட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

ஐரோப்பாவில் பள்ளிக்கூடம் வரத்தொடங்குமுன்பே மழலைகள் அதிபருமனாவது சாதனை அளவை எட்டியுள்ளது என்று டாய்பாக்ஸ் சர்வே தெரிவித்துள்ளது.

"குழந்தைகளின் உடற்பருமன் குறைப்பாட்டைத் தடுக்க புதிய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது" என்கிறார் யான்னிஸ் மனியோஸ். "நிறைய நாடுகளில் ஆரோக்கியமான உணவுமுறையோ, துடிப்பான விளையாட்டுகளோ மேற்கொள்ளப்படுவதில்லை" என்றும் சொன்னார், இந்த ஏதென்ஸ் ஹார்கோப்பியோ பல்கலைகழகத்தின் துணைப் பேராசிரியர். "உடல் உழைப்புக்கு வாய்ப்பில்லா நடத்தை முறைகள், குறிப்பாக, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை உடற்பருமன் அதிகரிப்பதற்கு வழி கோலுகின்றன"

ஸ்பெய்னில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை அடைவதற்கு முன்பே 40 சத குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகள் அதிபருமனாகிவிடுகிறார்கள் என்றும், ப்ரிட்டனின் ஐந்தில் ஒரு குழந்தை இக்குறைப்பாட்டைக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

செய்தி: திரு: ஷஃபி


Read more about குழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம் - ஆய்வு முடிவு [4203] | வாசகர் கட்டுரைகள் | கட்டுரைகள் at www.inneram.com

 

photo of a boy eating chips and watching TVTelevision and media. Children 8—18 years of age spend an average of 7.5 hours a day using entertainment media, including TV, computers, video games, cell phones, and movies. Of those  7.5 hours, about 4.5 hours is dedicated to viewing TV.19 Eighty-three percent of children from 6 months to less than 6 years of age view TV or videos about 1 hour and 57 minutes a day.20  TV viewing is a contributing factor to childhood obesity because it may take away from the time children spend in physical activities; lead to increased energy intake through snacking and eating meals in front of the TV; and, influence children to make unhealthy food choices through exposure to food advertisements. https://www.cdc.gov/obesity/childhood/problem.html