சுன்னத் செய்வதற்கு நீதிமன்றம் தடை: முஸ்லிம்கள் போராட்டம்

11/09/2012 17:21

ஜேர்மனியில் சுன்னத் செய்வதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர்.

ஜேர்மனியின் கோலோன் நகர நீதிமன்றம் சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளதுடன், பெரியவர்கள் சம்மதத்துடன் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோலோன் நகர நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மற்ற நகரங்களில் உள்ள மருத்துவர்களும் சுன்னத் செய்வதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள மறுக்கின்றனர்.

சுன்னத் செய்வதற்குரிய தடையை நீக்க கோரி யூதர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து, பெர்லின் நகரில் நேற்று மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் படி கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

யூத சமுதாயத்தில் குழந்தை பிறந்த எட்டாவது நாளில் சுன்னத் செய்வது மரபாக உள்ளது.

முஸ்லிம்களில் ஒவ்வொரு நாட்டு வழக்கத்திற்கு ஏற்றபடி, மத உட்பிரிவுகளுக்கு உட்பட்டு, தகுந்த வயதில் சுன்னத் செய்வது வழக்கமாக உள்ளது.

newsonews.com