நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

15/09/2012 23:00

 

முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இராமநாதபுரம் நகரில் இராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ள அரசு பேருந்து பணிமைனயின் முன்பாக 15.09.2012 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு போரட்டம் துவங்கயது. தங்களது நபிகளாரை இழிவாக சித்தரித்து திரைப்படம் எடுத்ததைப் பொருக்க முடியாத முஸ்லிம்கள் குறிப்பிட்ட நேரத்தற்கு முன்பாகவே குழுமினார்கள்.

போராட்டத்தை மாவட்டத தலைவர் சைபுல்லாகான அவர்கள் துவக்கிவைக்க மக்களது கோசம் வீரமாகவும் ஆக்ரோசத்துடனும் வீரியமாக கூடியிருந்த மக்களை உற்சாகப்படுத்தி தங்களது கைகளை உயர்த்து ஆவேசக் கோசம் போடவைத்தது. மக்கள் வெள்ளம் கூடிக்கொண்டே இருப்பதை அறிந்த காவலதுறையினர் நூற்றுக்கனக்கான காவலர்களைக் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழப்போக்கர்களுக்கும், சாலை விதிகளுக்கும், சாலையில் கடைவைத்துள்ளவர்களுக்கும் எந்த வித இடையுறும் இன்றியே தங்களது போராட்டங்களை அமைத்துக் கொள்வதால், கவலர்களுக்கு பொறுப்பு குறைந்து வேடிக்கை பார்த்தார்கள்.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே! இதுவரை இராமநாதபுரம நகர் காணத அளவிற்கு மக்கள் கூட்டம் நிறம்பி வழிந்தது. ஆளும் கட்சி எதிர்கட்சிகள் கூட இந்த அளவிற்கு மக்களைத் தரிட்டியது கிடையாது என்று கூடியிருந்த மக்கள் கூறியது நம்மை இன்னும் உற்சாகப்படுத்தியது.

11.45 மணக்கு மாநில் செயலாளர் கோவை அப்துர்ரஹிம் அவர்கள் கண்டன உரையினைத் தொடங்கினார்க்ள்.இந்த திரைப்படம் எடுத்தவன் சித்தரித்த விதம் எந்த அளவிற்கு முஸ்லிம்களைப் பாதித்துள்ளது, இவனின் நோக்கம் என்ன? இதற்கு அமெரிக்க அரசு துணைபோவது ஏன்? என்பன போன்றவைகளை விளக்கி உரையாற்றினார்கள். கண்டனை உரையின் வீரியத்திற்கு ஏற்ப மக்கள் அல்லாஹ் அக்பர் என்று கோசமிட்டு ஆமோதித்தார்க்ள.