முஸ்லீம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் அதிகாரவர்கம் - பெரம்பளுரில் TNTJ ஆர்ப்பாட்டம்

06/07/2012 18:17

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரும்பாவூர் என்ற குக்கிராமம். இந்த ‎ஊர் பெரம்பலூரிலிருந்து 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் வசித்து ‎வரும் சாகுல் ஹமீது என்ற மணமகனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த யுரேஷா பானு ‎என்ற மணமகளுக்கும் கடந்த 25.06.12 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ‎அங்குள்ள கோகுல் திருமண மண்டபத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் ‎முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.‎

திருமண தினத்தன்று காலை 10.20 மணியளவில் ஆர்.டி.ஓ பேச்சியம்மாள் ‎தலைமையில் மண்டபத்தினுள் புகுந்த காவல்துறையினர் திருமணத்தைத் தடுத்து ‎நிறுத்தி மணமகன், மணமகள், மணமகனின் பெற்றோர்கள், மணமகளின் ‎பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துச் சென்றனர்.‎

ஏன் திருமணத்தை நிறுத்துகின்றீர்கள் என்று காரணம் கேட்டதற்கு சமூக ‎நலத்துறையிலிருந்து புகார் வந்துள்ளது. நீங்கள் நடத்தும் இந்தத் திருமணம் ‎குழந்தைத் திருமணம் ஆகும். மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது. இது இந்திய ‎அரசியல் அமைப்பு சாசனச் சட்டப்படி குற்றம். எனவே உங்களைக் கைது ‎செய்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.‎

மேலும், இது மாவட்ட கலக்டருடைய உத்தரவு. மாவட்ட கலக்டர் இதற்கு முன்பு ‎இது போன்ற சட்டத்துக்கு முரணாக நடத்தப்பட்ட 99 குழந்தைத் திருமணங்களைத் ‎தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் தடுத்து நிறுத்தும் 100வது திருமணம் என்று ‎பீற்றிச் சென்றுள்ளனர்.‎

மணமகன் வீட்டினரும், மணமகள் வீட்டினரும் இணைந்து பரிபூரண சம்மதத்துடன் ‎நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் இவர்களாக மூக்கை நுழைத்து, “மணமகளுக்கு 16 ‎வயதுதான் ஆகின்றது; எனவே இது குழந்தைத் திருமணம்” என்று சட்டம் பேசி, ‎இந்தத் திருமணத்தை அநியாயமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.‎

இந்த அக்கிரமத்தைச் செய்த காவல்துறையினருக்கும், இந்த ஆர்.டி.ஓ.விற்கும், ‎மெத்தப்படித்த மேதாவியாக உள்ள கலெக்டருக்கும் முஸ்லிம்களுக்கென்று ‎இந்தியத் திருநாட்டில் தனியாக, “முஸ்லிம் பெர்சனல் லா” (முஸ்லிம் தனியார் ‎சட்டம்) என்று ஒன்று உள்ளது என்பது தெரியாதா? இது கூடத் தெரியாமலா இந்தக் ‎கூமுட்டைகள் பதவியில் அமர்ந்தார்கள். அதிலும் இந்தக் கைது உத்தரவை ‎பிறப்பித்த மாவட்டக் கலெக்டர், “தரேஸ் அஹ்மது” என்பவர் ஒரு முஸ்லிம் ‎என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடிய ‎கலக்டருக்கே முஸ்லிம்களுக்கு தனியாக சட்டம் இருப்பது தெரியவில்லை ‎என்றால் இவர் உண்மையாகவே கலெக்டருக்கு படித்து இந்த பொறுப்பில் வந்தாரா? ‎அல்லது கள்ளத்தனம் செய்து கொல்லைப் புறமாக இந்தப் பொறுப்பிற்கு வந்தாரா? ‎என்று தெரியவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்தை அனுகிய உறவினர்கள்

அதன்பின் இந்தப் பிரச்சனை சம்மந்தமாக பெரம்பளுர் தவ்ஹீத் ஜமாஅத்தை மணமக்களின் பெற்றோர் சந்தித்து நடந்ததை கூறினர் உடனே காவல் நிலையம் சென்ற பெரம்பளுர் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அஷ்ரப் அலி நடந்த சம்மவம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு உட்பட்டது என்று கூறி அதற்கு ஆதாரமாக டெல்லி உயர் நீதி மன்றம் கடந்த வாரம் அளித்த தீர்ப்பு சம்மந்தமான செய்தியை உணர்வு பத்திரிக்கையில் இருந்து எடுத்துக் காட்டினார். தீர்ப்பு நகளும் காவல் துறையிடம் கொடுக்கப்பட்டது. அதன் படி வயது வந்த பெண் 15 வயதை அடைந்தால் தாம் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள இந்திய அரசியல் சாசனம் முஸ்லீம்களுக்கு உரிமை வழங்கியுள்ளது என அதிகார வர்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது. அன்றைய தினமே இந்த அராஜகத்தை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்றி https://www.tntj.net/93789.html