வளைகுடா நாடுகளில் ரமளான் மாதம் துவங்கியது - நமதூரில் இன்று எதிர்பார்க்கப்படுகிறது

20/07/2012 10:33

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

வளைகுடா நாடுகளில் இன்று ரமளான் மாதம் துவங்கியுள்ளது, பெரும்பாளான நாடுகளில் இஸ்லாமிய மக்கள் இன்று முதல் நோன்பு வைத்துள்ளனர். ரமளான் மாதத்தின் துவக்கம் குறித்து இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் இன்னும் முடிவு செய்யவில்லை. இன்று இரவு ரமாளான் முதல் பிறை தமிழகத்தில் தெறியும் என மக்கள் ஆவளுடன் உள்ளனர்.

வழக்கம் போல் இந்தவருடமும் ரமளானை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் இந்த வருடம் முதல் நோன்புக் கஞ்சி காய்ச்சப் படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோன்று இவ்வருட ரமளான் தொலைகாட்சி நிகழ்சிகளும் கலைகட்டத்துவங்கியுள்ளது. இந்த வருடம் தொடர் சொர்பொலிவாக ”மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு” என்ற தலைப்பில் மெகா தொலைகாட்சியில் காலை ஷஹர் நேரத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. பார்த்து பயன் பெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.