0. அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart)

0. அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart)

மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகமே அந்த நூறு மனிதர்கள்.

 

அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000 மனிதர்களில் சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார். வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார்.

 

அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வெறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான அம்சமாகும்.

 

இந்த நூல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. மைக்கேல் ஹர்ட வரிசைப்படுத்திய விதம் குறித்து பல்வேறு கருத்துக்களும் மறுப்புகளும் சில மதவாதிகளால் எடுத்துவைக்கப்பட்டது. காரணம் இந்த நூலில் ஹர்ட் இஸ்லாமிய தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்ததுதும் கிருத்துவ கடவுளாக கருதப்படும் ஏசுநாதருக்கு 3ம் இடம் கொடுத்ததுமே காரணம். பெரும்பான்மையான கிருத்தவர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று அவர் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தார் மைக்கேல் ஹர்ட். 

 

இந்த நூலை தமிழ்நாட்டு எழுத்தாளர் மனவை முஸ்தபா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த புத்தகம் மிகப்பெரியது என்பதால் தமிழில் இணையதளத்தில் வெளியிட எந்த இணையதளமும் முயற்சி எடுக்கவில்லை. அதற்காக பல்வேறு ஆய்வுக்குப் பிறகு இந்த புத்தகத்தின் துனுக்குகளை சில ஆங்கில மற்றும் தமிழ் இணையதளங்களில் இருந்து தொகுத்து புதுவலசை.இன் இணைதளத்திற்காக வெளியிடுகிறோம். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வல்ல நாயனுக்கும் இணையதள நண்பர்களுக்கும் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறோம்.